Winter Hair Fall: குளிர்காலத்தில் சூடான குளியலா..? இது தலை முடி உதிர்தலை ஏற்படுத்தும்!
Winter Hair Care Tips: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று உச்சந்தலையில் இருந்து ஈரப்பதத்தை ஈர்க்கிறது. இது உச்சந்தலையை உலர்த்தி பொடுகை பிரச்சனையை அதிகரிக்கிறது. இதனால், முடி வேர்களை பலவீனமாகி, முடி உதிர தொடங்குகிறது. இதுமட்டுமின்றி, அடிக்கடி சூடான நீரில் தலைக்கு குளிப்பது முடி வேர்களை பலவீனப்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்தல் பிரச்சனையை அதிகரிக்கிறது.
குளிர்காலத்தில் முடி உதிர்தல் (Hair Fall) பிரச்சனை மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று உச்சந்தலையில் இருந்து ஈரப்பதத்தை ஈர்க்கிறது. இது உச்சந்தலையை உலர்த்தி பொடுகை பிரச்சனையை அதிகரிக்கிறது. இதனால், முடி வேர்களை பலவீனமாகி, முடி உதிர தொடங்குகிறது. இதுமட்டுமின்றி, அடிக்கடி சூடான நீரில் (Hot Water) தலைக்கு குளிப்பது முடி வேர்களை பலவீனப்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடு முடி உதிர்தல் பிரச்சனையை அதிகரிக்கிறது. அதன்படி, குளிர்காலத்தில் நம் தலைமுடியை நாம் கூடுதல் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனையை பெருமளவில் நீக்க உதவும் சில குறிப்புகளை இங்கே தெரிந்து கொள்வோம்.
வெங்காயச் சாறு:
குளிர் காலத்தில் முடி உதிர்தல் பிரச்சனையை சரிசெய்ய, வெங்காயச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெங்காயச் சாற்றில் சல்பர் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் புதிய முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உங்கள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. அதன்படி, வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் 20-25 நிமிடங்கள் தடவி, பின்னர் குளிக்கலாம். இவ்வாறு வாரத்திற்கு 1-2 முறை செய்வது முடி உதிர்தல் பிரச்சனையை சரிசெய்யும்.
ALSO READ: மழைக்காலத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இந்த வழிமுறைகள் செய்தால் போதும்!




கிரீன் டீ:
எடை குறைக்க விரும்புவோர் கிரீன் டீயை குடிக்கிறார்கள். இதனை தொடர்ந்து, தூக்கி எறியும் கிரீன் டீ பைகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். அதாவது மீதமுள்ள கிரீன் டீ பைகளை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, அவற்றை உங்கள் உச்சந்தலையில் தடவலாம். இதன்பிறகு, உங்கள் தலைமுடியை நன்கு அலசலாம். கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.
ஆரோக்கியமான உணவுகள்:
குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியை வலுப்படுத்த இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். கீரை மற்றும் ப்ரோக்கோலி போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், பருப்பு, சோயா மற்றும் சீஸ் போன்ற புரத மூலங்கள், பாதாம் மற்றும் வால்நட்ஸ் போன்ற ஒமேகா-3 உணவுகள், கேரட் மற்றும் பீட்ரூட் காய்கறிகள் மற்றும் வெல்லம் போன்ற இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலைக் குறைக்கின்றன.
தேங்காய் பால்:
தேங்காய் பால் முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் போதுமான அளவு இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளது. இது முடியை வலுப்படுத்துகிறது. இதை உங்கள் உச்சந்தலையில் தடவலாம். முடிந்தால், தேங்காய் பாலில் சிறிது எலுமிச்சையை சாற்றை பிழியலாம். இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து வலுவாக்கும்.
ALSO READ: பொடுகு தொல்லையா..? எண்ணெய் தேய்த்தும் பலன் இல்லையா? சில டிப்ஸ் இதோ!
வெந்நீரில் தலைக்கு குளிக்காதீர்கள்..
குளிர்காலத்தில் நாம் அடிக்கடி சூடான நீரில் குளிக்க தொடங்குகிறோம். இவ்வாறு தொடர்ந்து செய்வது உங்கள் தலைமுடி பலவீனமாகி வறண்டு, உயிரற்றதாக மாற்றுகிறது. இது நாளடைவில் பொடுகு போன்ற பாக்டீரியா தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.