Hair Fall: சைவ உணவு உண்பவர்களுக்கு முடி உதிர்தல் ஏற்படுமா..? மருத்துவர் சஹானா வெங்கடேஷ் விளக்கம்!
Vegetarians Face Hair Fall: அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சிகளில் இருந்து போதுமான அளவு வைட்டமின் பி 12 கிடைக்கிறது. அதேநேரத்தில், சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் பி12 கிடைப்பது கிடையாது. இது முடி உதிர்தல் பிரச்சனைக்கு காரணமாக அமைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்தலுக்கு (Hair Fall) பல காரணங்கள் உள்ளன. பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் இந்த பிரச்சனையை அதிகளவில் எதிர்கொள்கிறார்கள். நாளடைவில் ஆண்களுக்கு தலையில் வழுக்கை பிரச்சனைகளையும் உண்டாக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் உங்கள் ஷாம்பு அல்லது எண்ணெயை மட்டுமல்ல, பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அசைவ உணவு (Non Veg) உண்பவர்களை காட்டிலும், சைவ உணவு உண்பவர்களே அதிகளவில் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் என்ன..? இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து மருத்துவர் சஹானா வெங்கடேஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: மழைக்காலத்தில் ஆரோக்கியமான சருமம் வேண்டுமா? இந்த வழிமுறைகள் செய்தால் போதும்!




சைவ உணவு உண்பவர்களுக்கு அதிகளவில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்பட காரணம் என்ன..?
View this post on Instagram
அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சிகளில் இருந்து போதுமான அளவு வைட்டமின் பி 12 கிடைக்கிறது. அதேநேரத்தில், சைவ உணவு மட்டும் சாப்பிடுபவர்களுக்கு போதுமான அளவு வைட்டமின் பி12 கிடைப்பது கிடையாது. இது முடி உதிர்தல் பிரச்சனைக்கு காரணமாக அமைக்கிறது. உங்கள் தலைமுடியை நல்ல நிலையில் வைத்திருப்பதில் வைட்டமின் பி12 ஒரு முக்கிய காரணியாகும். இறைச்சி அல்லது மீனில் இருந்து பெறக்கூடிய அத்தியாவசிய அமினோ அமிலங்களால் உடலுக்கு தேவையான வைட்டமின் பி12 கிடைத்து புரதம் உற்பத்தி செய்யப்படுகிறது. சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் வைட்டமின் பி12 போதுமான அளவு இல்லாமல் போகிறது. இது முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.
சைவ உணவர்களுக்கு மாற்று வழி என்ன..?
நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் காலையில் காபி அல்லது ஸ்மூத்தி எடுத்துகொள்ளும்போது, பாலுக்கு பதிலாக வைட்டமின் பி12 உள்ள சோயா பால் அல்லது பாதாம் பால் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். வைட்டமின் பி12 இடம்பெற்றுள்ள ராகி அல்லது மில்லட் பிளேக்ஸ்களை எடுத்து கொள்ளலாம். தொடர்ந்து, முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த ஆற்றலை இயற்கையாகவும் எளிதாகவும் அதிகரிக்கவும், வைட்டமின் பி12 செறிவூட்டப்பட்ட சோயா பால், பாதாம் பால், நியூட்ரிஷனல் ஈஸ்ட், கேழ்வரகு ரொட்டி, பால், சோயா சங்க்ஸ் மற்றும் டோஃபு ஆகியவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ALSO READ: பொடுகு தொல்லையா..? எண்ணெய் தேய்த்தும் பலன் இல்லையா? சில டிப்ஸ் இதோ!
நெல்லிக்காய் ஆரோக்கியமான கூந்தலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளன மற்றும் வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும் . இது உணவில் இருந்து இரும்பை உறிஞ்சி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. முடி உதிர்தல் அல்லது பிற முடி பிரச்சினைகளுக்கு சரிசெய்ய, நீங்கள் தினமும் நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.