Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
டாக்டர் அட்வைஸ் - Doctor Advice

டாக்டர் அட்வைஸ் - Doctor Advice

அனைவரும் அனைத்து நேரங்களில் மருத்துவர்களிடம் சென்று ஆலோசனைகளை பெற முடியாது. இதற்கான காலம், நேரம் போன்றவை நமக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். ஒரு முறை மருத்துவரிடம் சென்று வந்தாலும் நமக்கு வரவுக்கு மீறிய செலவுகளை தரும். இருப்பினும், சில மருத்துவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மக்கள் பலன்களை பெற இலவசமாக ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இது முழுமையாக மக்களுக்கு சென்றடைகிறதா என்று கேள்வி எழும்போது இல்லை என்ற பதில் வருகிறது. இந்தநிலையில், மருத்துவர்கள் சொல்லும் இலவச ஆலோசனைகளை செய்தி வடிவத்தில் டிவி9 தமிழ் வழங்குகிறது. இவற்றை படித்து முழு பயன்களை அறிந்து உடல்நலத்தை பராமரித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்.

Read More

New Born Baby: பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கலாமா? வேண்டாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

Cow Milk For New Born Baby: பசும்பாலில் ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதில் பெரும்பாலும் இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான பிற ஊட்டச்சத்துக்கள் இல்லை. எனவே, பிறந்த உடனேயே பசும்பாலைக் கொடுப்பது இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும், இதனால் இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். இது எரிச்சல், பசியின்மை மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

Pregnancy: நார்மல் டெலிவரி ஆக வேண்டுமா..? டாக்டர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!

Normal Delivery Tips: நார்மல் டெலிவரி வலியை தாங்குவது எளிதல்ல என்று பலரும் நினைக்கிறார்கள். எனவே, ஆபரேஷன் என்னும் சி-பிரிவு பிரசவத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இது டெலிவரி நேரத்தில் பெரியளவில் வலியை கொடுக்கவில்லை என்றாலும், வாழ்நாள் முழுவதும் ஒரு சில வலியை கொடுக்கலாம்.

Health Tips: ஒமேகா 3 என்றால் என்ன..? தினமும் எடுத்துக்கொள்ளலாமா? dr அருண் குமார் விளக்கம்!

Omega-3 Fish Oil Supplements: ஒமேகா 3 என்பது உடலுக்கு அவசியமான ஒரு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். மனித உடலால் அதை ஒருங்கிணைக்க முடியாததால் அனைவரும் ஒமேகா 3 ஐ சேர்க்க வேண்டும். ஒமேகா 3 முதன்மையாக மூன்று வகைகளைக் கொண்டுள்ளது.

Teeth Care Tips: அழுத்தி தேய்த்தால் பல் சுத்தமாகுமா? எச்சரிக்கும் மருத்துவர் ஜனனி ஜெயபால்!

Oral Hygiene: நமது பற்களின் ஆரோக்கியத்திற்காக ஒரு நாளைக்கு 2 முறை பல் துலக்குவது மட்டுமல்லாமல், நமது பல் துலக்கும் நுட்பம் சரியானதா இல்லையா என்பதையும் கவனிக்க வேண்டும். பல் துலக்கும்போது, நாம் பல் துலக்கும் பிரஸை 45 டிகிரி கோணத்தில் வைத்து, ஈறுகளுக்கு அடியில் மெதுவாக நகர்த்தி தேய்க்க வேண்டும்.

Health Tips: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சலா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ சொல்லும் அட்வைஸ்!

Immunity Boosting Foods For Kids: பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் சீஸ் மற்றும் பால் போன்ற பால் பொருட்கள் குழந்தைகளின் உணவில் சேர்க்கப்பட வேண்டும். அந்தவகையில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய 5 உணவுகள் பற்றி குழந்தைகள் நல மருத்துவர் ஹரிணி ஸ்ரீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Health Tips: ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம்..? மருத்துவர் சரண் ஜேசி அறிவுரை!

Tea Drinking: கோடை காலத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை டீ குடிக்கலாம். நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை அல்லது ஒவ்வாமை உள்ளவர்கள் டீ அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். கோடை காலத்தில் வெறும் வயிற்றில் டீ குடிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், டீயில் டானின் என்ற வேதிப்பொருள் உள்ளது.

Health Tips: சாப்பிட்ட பிறகும் அடிக்கடி பசிக்கிறதா? காரணம் என்ன? மருத்துவர் சிவசுந்தர் விளக்கம்!

Hungry Frequently: மாவிலிருந்து தயாரிக்கப்படும் சில உணவுகள் கார்போஹைட்ரேட்டுகள் சார்ந்த உணவுகள் சாப்பிட்ட பிறகு அடிக்கடி பசி எடுக்கும். ஏனெனில் அவற்றில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவாக உள்ளன. இந்த குறைந்த நார்ச்சத்து உணவு வேகமாக ஜீரணமாகி பசியை ஏற்படுத்துகிறது.

Health Tips: அந்துருண்டை குழந்தைகளுக்கு இவ்வளவு ஆபத்தானதா? மருத்துவர் அருண்குமார் விளக்கம்!

Nephtalineballs Side Effects: அந்துருண்டை பந்துகளில் காணப்படும் நாப்தலீன் என்ற வேதிப்பொருள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும். இந்த பந்துகளை அதிகமாக வெளிப்படுத்துவது தோல் எரிச்சல், கண் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். அந்துருண்டை பந்துகளை சரியாகவும் குறைந்த அளவிலும் பயன்படுத்தும்போது, ​​பூச்சிகளிலிருந்து பாதுகாக்க உதவும்.

Health Tips: கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம்..? மருத்துவர் நான்சி அட்வைஸ்..!

Pregnancy Guide: கர்ப்பிணிப் பெண்கள் நல்ல உணவை உட்கொள்வதோடு மன அழுத்தமில்லாமல் (Mental Pressure) இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள், ஏனெனில் இவை அனைத்தும் தாயை மட்டுமல்ல, கருப்பையில் வளரும் குழந்தையையும் பாதிக்கின்றன. தாய் ஆரோக்கியமாக இருந்தால், குழந்தையும் ஆரோக்கியமாக நல்ல மனநிலையுடன் இருக்கும்.

Morning Drinks: காலையில் எழுந்ததும் எந்த பானம் குடிக்க சிறந்தது..? மருத்துவர் ராஜா கொடுத்த அட்வைஸ்!

Morning Healthy Drinks: காலையில் எழுந்ததும் சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் கவனித்து கொள்ளலாம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சில ஆரோக்கியமானவற்றை எடுத்து கொண்டால் படிப்படியாக சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்கி, உங்கள் முழு நாளையும் ஆற்றல் மிகுந்ததாக மாற்றும்.

Eye Care: சிறுநீரால் கண்களை கழுவும் பெண்.. இது பாதுகாப்பானதா? மருத்துவர் சந்தோஷ் ஜேகப் விளக்கம்!

Urine Eye Wash: மனித சிறுநீர் என்பது உடலில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு கழிவுப்பொருள். சிறுநீரில் யூரியா, கிரியேட்டினின், அம்மோனியா, உப்புகள் மற்றும் நச்சுகள் உள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. இது ஆபத்தை தரும்.

நாள் முழுக்க குட்டி குட்டி வாக்கிங் செல்வது பலனுண்டா? மருத்துவர் சொல்வது என்ன?

Short Walks vs Long Walk : மக்கள் ஆரோக்கியத்திற்காக நடைப்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒரு மணி நேர காலை நடை சிறந்தது அல்லது நாள் முழுவதும் குறுகிய நடைகளா என்ற குழப்பத்திற்கு, ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் நிபுணர் விளக்கம் அளித்துள்ளார்

Pregnancy Tips: கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? மருத்துவர் ஸ்வாதி நேதாஜி டிப்ஸ்!

Womb Baby Health: கர்ப்பிணிப் பெண்கள் சீரான, ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவை உண்ண அறிவுறுத்தப்படுகிறார்கள். கருவில் (Womb) வளரும் குழந்தைக்கு வலிமையையும் ஊட்டச்சத்தையும் வழங்கக்கூடிய சில தரமான உணவுகளைப் பற்றி மருத்துவர் ஸ்வாதி நேதாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Health Tips: காயத்தின் மீது தேங்காய் எண்ணெயை தடவலாமா..? மருத்துவர் சரவணன் விளக்கம்!

Coconut Oil: காயங்களில் தேங்காய் எண்ணெயை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருந்தாலும், எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மை காயம் ஆறும் பண்பை மெதுவாக்கும், ஆக்ஸிஜன் ஓட்டத்தை குறைக்கும், பாக்டீரியா, தூசி போன்றவை எண்ணெயின் பிசுபிசுப்பு தன்மையில் ஒட்டிகொண்டு காயத்தை இன்னும் பெரியதாக்க செய்யலாம்.

Health Tips: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிட்டால் போதும்.. மருத்துவர் சரண் சூப்பர் டிப்ஸ்!

Reduce Blood Pressure: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உணவில் உப்பு, எண்ணெய் மற்றும் மசாலா பொருட்களை குறைவாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. உணவில் சில காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும் இரத்த அழுத்தத்தை எளிதாக கட்டுப்படுத்தலாம்.