Health Tips: சளி, இருமலின்போது குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா? இது பிரச்சனையை மேலும் அதிகரிக்குமா?
Banana Eating: வாழைப்பழம் போன்ற ஆரோக்கியமான பழங்களை குழந்தையின் உணவில் இருந்து நீக்குவது நல்லதல்ல. வாழைப்பழம் ஒரு சத்தான பழம். இதில் ஆற்றல், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. சரியான அளவிலும் சரியான முறையிலும் கொடுக்கப்பட்டால், வாழைப்பழங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை தராது.
குளிர்காலம் (Winter) தற்போது பெரியவர்களை விட நம் வீட்டு குழந்தைகளை அதிகம் பாதிக்க செய்கிறது. மாறிவரும் பருவங்களில் குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் ஏற்படும். இதன் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவில் பல்வேறு மாற்றங்களை செய்கின்றனர். மேலும், குழந்தைகளுக்கு பிடித்த ஒரு சில குறிப்பிட்ட உணவுகளுக்கும் தடை போடுகிறார்கள். இத்தகைய பழங்களில் வாழைப்பழம் ஒன்றும். குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள சளி மற்றும் இருமலின் போது வாழைப்பழங்களை தவிக்கிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர்கள் அனைவரும் வாழைப்பழம் சாப்பிடுவது சளி உற்பத்திய அதிகரிக்கும் என்றும், இருமலை மோசமாக்குகிறது என்றும் நம்புகின்றனர். இந்தநிலையில், வாழைப்பழம் (Banana) சாப்பிடுவது குழந்தைகளுக்கு சளி, இருமலை அதிகரிக்குமா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வாழை இலையில் உணவு உண்பது பாதுகாப்பானதா? இது எந்த நோய்களை குணப்படுத்தும்?
குழந்தைகளுக்கு வாழைப்பழம் பிரச்சனையை தருமா..?
வாழைப்பழம் ஒரு சத்தான பழம். இதில் ஆற்றல், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. சரியான அளவிலும் சரியான முறையிலும் கொடுக்கப்பட்டால், வாழைப்பழங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை தராது.




பொதுவாகவே சளி எந்த பழத்தாலும் அல்லது உணவாலும் ஏற்படுவதில்லை. மாறாக, இது வைரஸ்கள் மூலம் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். ஒரு குழந்தைக்கு மூக்கு ஒழுகுதல், இருமல் அல்லது சளி இருந்தால், அது வாழைப்பழங்கள் அல்லது வேறு எந்த பழங்களின் தாக்கம் அல்ல, மாறாக வைரஸுக்கு நோயெதிர்ப்பு மண்டலத்தின் எதிர்வினையாகும். எந்த உணவும் சளியை ஏற்படுத்தவோ அல்லது மோசமாக்குவதோ கிடையாது.
வாழைப்பழம் போன்ற ஆரோக்கியமான பழங்களை குழந்தையின் உணவில் இருந்து நீக்குவது நல்லதல்ல. ஒரு குழந்தைக்கு வாழைப்பழங்கள் சாப்பிட்டு அழற்ஜி ஏற்பட்டால் மட்டுமே தவிர்ப்பது நல்லது. மாறாக, குளிர்காலத்திலும் கூட குழந்தைகளுக்கு வாழைப்பழங்களை குறைந்த அளவில் கொடுக்கலாம்.
ஆராய்ச்சியில் கூறுவது என்ன..?
வாழைப்பழம் சாப்பிடுவது குழந்தைகளுக்கு சளியை அதிகரிக்குமா என்பதை நேரடியாக நிரூபிக்கும் எந்த ஆய்வும் இல்லை. பல தசாப்தங்களாக சளியை உற்பத்தி செய்யும் உணவாகக் கருதப்படும் பால் கூட சளியை உற்பத்தி செய்வதில்லை. இந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு தொண்டையில் ஏற்படும் கனமானது சளி உற்பத்தியால் அல்ல, அவற்றின் அமைப்பு மற்றும் உமிழ்நீருடனான தொடர்பு காரணமாக மட்டுமே ஏற்படுகிறது.
ALSO READ: இதயத்திற்கு இந்த 5 உணவுகள் எதிரிகள்.. எச்சரிக்கும் மருத்துவர் பிள்ளை!
சளி மற்றும் இருமல் காரணமாக ஒரு குழந்தை பசியை இழக்கும்போது வாழைப்பழம் மிகவும் நன்மை பயக்கும். அவை உடனடி ஆற்றலை வழங்குகின்றன. வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது, இது உடல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. அவை மென்மையாக இருப்பதால், தொண்டை எரிச்சலை ஏற்படுத்தாது, சாப்பிட எளிதாக இருக்கும். வாழைப்பழத்தை நசுக்கியும், குழைத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.