Health Tips: வாழைப்பழம் சாப்பிட இதுவே சிறந்த நேரம்.. மருத்துவர் சரண் ஜேசி சூப்பர் டிப்ஸ்!
Right Time to Eat Banana: சரியான நேரத்தில் வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்கள் ஆற்றல், செரிமானம் மற்றும் எடையை பராமரிக்க உதவி செய்யும். பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வாழைப்பழம் (Banana) பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது.
வாழைப்பழங்களை கிட்டத்தட்ட எல்லா பருவங்களிலும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பழமாகும். இந்த பழத்தை எடுத்துகொள்வது, உடனடி ஆற்றலை வழங்கும். ஆனால், சரியான நேரத்தில் வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்கள் ஆற்றல், செரிமானம் மற்றும் எடையை பராமரிக்க உதவி செய்யும். பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வாழைப்பழம் (Banana) பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இதயம் மற்றும் இரத்த அழுத்தத்தை நல்ல நிலையில் வைத்திருக்க இது மிக முக்கியமான கனிமமாகும். இது தவிர, வாழைப்பழத்தில் கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்றவை உள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவது குடல் இயக்கம் மற்றும் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, இது மலச்சிக்கலை (Constipation) தடுக்கிறது. அந்தவகையில், வாழைப்பழம் சரியான நேரத்தில் சரியான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் சரண் ஜேசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ALSO READ: கேரட் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்! எவ்வளவு சாப்பிடுவது நல்லது?
உடனடி ஆற்றலை வழங்கும்:
வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் உங்களுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. அதன்படி, நீங்கள் ஜிம்மிற்கு சென்றால் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி மேற்கொண்டால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு, அதாவது சுமார் 15-30 நிமிடங்களுக்கு முன்பு ஒரு வாழைப்பழத்தை எடுத்து கொள்ளலாம். இப்படி எடுத்து கொள்வதன்மூலம், வாழைப்பழங்கள் உங்கள் செயல்திறனை மேம்படுத்தும்.




எந்த நேரத்தில் யார் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது..?
அடிக்கடி சளி பிடிக்கும் நபராக இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. ஆரோக்கியமான நபராக இருந்தால், காலையில் எழுந்தவுடன் வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு உடனடி சக்தியை அளிக்கிறது. வாழைப்பழத்தில் இதில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும், இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது.
மதியத்திற்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடலாமா?
மதிய உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது. வாழைப்பழம் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது வயிற்று எரிச்சல் மற்றும் அமிலத்தன்மையிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.
ALSO READ: தினமும் இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்.. கண்களின் பார்வை திறன் கூடும்!
மாலையில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா..?
மாலையில் பசி எடுக்கும்போது மக்கள் பெரும்பாலும் துரித உணவுகளை தேடி செல்கிறார்கள். இதற்கு பதிலாக, வாழைப்பழங்களை எடுத்து கொள்ளலாம். இது உடலுக்கு தேவையான ஆற்றலையும், பசியையும் குறைக்கிறது. இதில் உள்ள இயற்கை சர்க்கரை, இனிப்பு சாப்பிடும் விருப்பத்தையும் குறைக்கிறது.