Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: ஒமேகா 3 என்றால் என்ன..? தினமும் எடுத்துக்கொள்ளலாமா? dr அருண் குமார் விளக்கம்!

Omega-3 Fish Oil Supplements: ஒமேகா 3 என்பது உடலுக்கு அவசியமான ஒரு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். மனித உடலால் அதை ஒருங்கிணைக்க முடியாததால் அனைவரும் ஒமேகா 3 ஐ சேர்க்க வேண்டும். ஒமேகா 3 முதன்மையாக மூன்று வகைகளைக் கொண்டுள்ளது.

Health Tips: ஒமேகா 3 என்றால் என்ன..? தினமும் எடுத்துக்கொள்ளலாமா? dr அருண் குமார் விளக்கம்!
மருத்துவர் அருண் குமார்Image Source: Freepik and instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 26 Nov 2025 21:00 PM IST

மீன் என்பது ஒமேகா 3 கொழுப்பு (Omega-3 Fish) அமிலங்களின் முதன்மையான மூலமாகும். இது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம் (Calcium) , வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானவையாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், யார் யார் ஒமேகா-3 மீன் எண்ணெய் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர் அருண் குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஒமேகா 3 என்பது உடலுக்கு அவசியமான ஒரு பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமாகும். மனித உடலால் அதை ஒருங்கிணைக்க முடியாததால் அனைவரும் ஒமேகா 3 ஐ சேர்க்க வேண்டும். ஒமேகா 3 முதன்மையாக மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. EPA, DHA மற்றும் DPA ஆகும். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் இதய நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒமேகா 3 மீன் எண்ணெய் அவசியமானது.

ஒமேகா 3:

ALSO READ: உங்களுக்கு கால்சியம் குறைபாடு உள்ளதா..? இதன் அறிகுறிகள் என்ன..?

இதய ஆரோக்கியம்:

மீன் எண்ணெயில் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயம் தொடர்பான பல பிரச்சனைகளை குறைக்க உதவுகின்றன. மீன் எண்ணெய் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது பக்கவாதம் மற்றும் இதய தடுப்பு ஆகியவற்றை தடுக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணி பெண்கள்:

குழந்தையின் மூளை வளர்ச்சியில் ஒமேகா 3யில் உள்ள EPA மற்றும் DHA முக்கிய பங்கு வகிப்பதாக தெரிகிறது. பல ஆய்வுகள் கர்ப்பிணி பெண்கள் ஒமேகா 3 எண்ணெய், வயிற்றில் உள்ள நுண்ணறிவு மற்றும் மூளை செயல்பாட்டுக்கு நன்மை பயக்கும்.

சிறுநீரக ஆரோக்கியம்:

மீன் எண்ணெயொல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும், இது பல சிறுநீரக பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும். மீன் எண்ணெய் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆண்களில் கருவுறுதல்:

இன்றைய வாழ்க்கை முறை பெரும்பாலான ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரித்துள்ளது. அந்தவகையில், மீன் எண்ணெய் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும், கருவுறுதலை ஊக்குவிக்கிறது.

ALSO READ: கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமா? மருத்துவர் ஸ்வாதி நேதாஜி டிப்ஸ்!

யார் யாருக்கு ஒமேகா 3 அவசியமானது..?

  • 19 வயதுக்கு மேற்பட்டோருக்கு தினசரி உணவு மூலம் DHA கிடைப்பதால், ஒரு நாளைக்கு ஒரு காப்ஸ்யூல் பெரும்பாலும் போதுமானது.
  • வயது 6 – 8: ஒரு நாளைக்கு தோராயமாக 900 மி.கி. ஒமேகா 3 உடன் கூடுதலாக சேர்க்க வேண்டும்.
  • வயது 9 – 13: பெண்கள் ஒரு நாளைக்கு 1,000 மி.கி., சிறுவர்கள் 1,200 மி.கி. எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • வயது 14 – 18: பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,100 மி.கி., சிறுவர்களுக்கு 1,600 மி.கி. எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1,100 மி.கி., ஆண்களுக்கு 1,600 மி.கி., கர்ப்பிணிப் பெண்களுக்கு 1,400 மி.கி., பாலூட்டும் பெண்களுக்கு 1,300 மி.கி. வேண்டும்.
  • இதய நோய் நோயாளிகள் ஒரு நாளைக்கு குறைந்தது 1,000 மி.கி. எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • சர்க்கரை நோய் அல்லது உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் ஒரு நாளைக்கு 2,000 மி.கி. எடுத்துகொள்ள வேண்டும்.