Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: பூசணி விதைகள் உடலுக்கு தரும் பூஸ்டர்.. 5 ஆரோக்கிய நன்மைகள் கேரண்டி!

Pumpkin Seeds Benefits: பூசணி விதைகளை தவறாமல் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்தநிலையில், பூசணி விதைகளை தினந்தோறும் எடுத்து கொள்வதன்மூலம் கிடைக்கும் 5 மிக முக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

Health Tips: பூசணி விதைகள் உடலுக்கு தரும் பூஸ்டர்.. 5 ஆரோக்கிய நன்மைகள் கேரண்டி!
பூசணி விதைகளின் நன்மைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2025 16:14 PM IST

பூசணி விதைகளின் (Pumpkin Seeds) நன்மைகள் பற்றி பலரும் அறிவது கிடையாது. பூசணி விதைகள் ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் ஃபுட் ஆகும். இது இயற்கையாகவே மெக்னீசியம், துத்தநாகம், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸினஜேற்றிகள் உள்ளன. இவை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கும். பூசணி விதைகளை தவறாமல் உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்தநிலையில், பூசணி விதைகளை தினந்தோறும் எடுத்து கொள்வதன்மூலம் கிடைக்கும் 5 மிக முக்கிய நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

இதய ஆரோக்கியம்:

பூசணி விதைகளில் மெக்னீசியம், துத்தநாகம், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளின் நல்ல மூலமாகும். இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவி செய்யும். நீங்கள் தினந்தோறும் பூசணி விதைகளை சேர்ப்பது இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.

ALSO READ: அதிக உப்பு சாப்பிடுவது ஆபத்தா..? குறைந்த அளவு உடலுக்கு ஏன் நல்லது?

நோய் எதிர்ப்பு சக்தி:

பூசணி விதைகளில் துத்தநாகம் போன்ற பண்புகள் உள்ளன. இவை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவி செய்கின்றன. இவை இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளிலும் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமான வைத்திருக்க உதவும்.

செரிமானத்திற்கு நல்லது:

பூசணி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது மலச்சிக்கலை போக்கவும், செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவும். பூசணி விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் உணவில் பூசணி விதைகளை சேர்ப்பது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி செய்யும். இது எடையை குறைக்கவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவும்.

தூக்கத்தை தூண்டும்:

பூசணி விதைகளில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது உடலில் டிரிப்டோபானை செரோடோனின் ஆக மாற்றுகிறது, இது ஒரு நல்ல ஹார்மோன் ஆகும், இது உங்களை நிம்மதியாக உணர வைத்து, நல்ல தூக்கத்தைத் தூண்டுகிறது.

ALSO READ: ஒரே ஒரு ஏலக்காயில் இத்தனை நன்மைகளா? இனி ஆரோக்கியம் அள்ளும்!

புற்றுநோய் பாதுகாப்பு:

பூசணி விதையில் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் பண்புகள் உள்ளன. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்யும். மேலும், தினந்தோறும் பூசணி விதைகளை எடுத்து கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு குறைவது கண்டறியப்பட்டது. எனவே, இது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.