Health Tips: சுடுதண்ணீர் குடிப்பதால் தொப்பை குறையுமா..? எடை குறைக்க எளிய வழியா இது?
Hot Water for Weight Loss: சுடுதண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. எடையை குறைக்க விரும்புவோருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சுடுதண்ணீர் தானே எடை குறைப்பை ஏற்படுத்தாது. சூடான நீரை குடிப்பதால் உங்கள் உடல் வெப்பநிலை மாறுகிறது. இந்த வெப்பநிலையை சமப்படுத்த, நமது உடல் அதன் உள் வெப்பநிலையை குறைக்கிறது.
தண்ணீர் (Water) நம் வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பது அனைவருக்கும் தெரியும். தாகத்தை தணிப்பதற்கு மட்டுமல்லாமல், நம் உடலின் சரியான செயல்பாட்டிற்கும், நோயை தடுப்பதற்கு இது மிகவும் முக்கியமானது. நம் உடலில் கிட்டத்தட்ட 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. எனவே, ஒவ்வொருவரும் நாள்தோறும் சரியான செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டுமானால், தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது முக்கியமானது. நாம் ஏதேனும் ஒரு கடினமான வேலையை மேற்கொண்ட பிறகு, குளிர்ந்த நீர் குடிப்பது உடலை குளிர்விக்கும் அதே வேளையில், சூடான நீர் நச்சுகளை வெளியேற்றி செரிமானத்தை மேம்படுத்த உதவி செய்யும். அதேநேரத்தில், சுடுதண்ணீர் குடிப்பதன் மூலம் எடையை குறைக்க (Weight Loss) முடியும் என்று பலரும் நம்புகிறார்கள். இது உண்மைதானா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வெண்டைக்காய் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா..? விளக்கும் மருத்துவர் சிவசுந்தர்!
அதிக தண்ணீர் குடிப்பதால் என்ன நன்மை..?
அதிக தண்ணீர் குடிப்பது எடை குறைப்புக்கு உதவும் என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. இதற்கு ஒரு காரணம், தண்ணீர் குடிப்பது நம்மை வயிறு நிரம்பியதாக உணர வைப்பதால், குறைவாக சாப்பிட வழிவகுக்கும். இது உடல் ஊட்ச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சி தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்றவும் உதவுகிறது. எடை குறைக்க சுடுதண்ணீர் பயனுள்ளஹாக இருந்தாலும், இது அதிகளவில் எடையை குறைக்க உதவு செய்யும் என்பது முற்றிலும் உண்மையல்ல.




சுடுதண்ணீர் குடிப்பது எடையை குறைக்காது:
சுடுதண்ணீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. எடையை குறைக்க விரும்புவோருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். ஆனால், சுடுதண்ணீர் தானே எடை குறைப்பை ஏற்படுத்தாது. சூடான நீரை குடிப்பதால் உங்கள் உடல் வெப்பநிலை மாறுகிறது. இந்த வெப்பநிலையை சமப்படுத்த, நமது உடல் அதன் உள் வெப்பநிலையை குறைக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. சூடான நீர் உடல் கொழுப்பை உடைக்காது. இதற்கு பதிலாக சாப்பிட்ட உணவில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகளை உடைத்து, இது அவற்றை ஜீரணிக்கவும், எரிக்கவும் உதவுகிறது.
செரிமான அமைப்பு அவற்றை எளிதாக எரிக்க அனுமதிக்கிறது. உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பது பசியை அடக்குகிறது, இதனால் கலோரி உட்கொள்ளல் குறைகிறது.
ALSO READ: இந்த உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
நன்மைகள்:
- சூடான நீர் குடல் இயக்கத்தை அதிகரித்து, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.
- சூடான நீர் குடிப்பதால் உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது மற்றும் வியர்வை மூலம் தோல் துளைகளில் இருந்து நச்சுகள் வெளியேறுகின்றன.