AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

SIP-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

How To Create 1 Crore By Investing In SIP | பொதுமக்கள் மத்தியில் எஸ்.ஐ.பி மிகவும் பிரபலமான முதலீடாக உள்ளது. இந்த நிலையில், மாதம் ரூ.5,000 முதலீடு செய்யும் பட்சத்தில் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேமிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

SIP-ல் மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Mar 2026 23:54 PM IST

பொதுமக்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதற்காக பலர் பல சேமிப்பு அல்லது முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில், பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள திட்டம் தான் எஸ்ஐபி (SIP – Systematic Investment Fund) சமீப காலமாக பலரும் எஸ்ஐபியில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த நிலையில், மாதம் ரூ.5,000 முதலீடு என்ற அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.1 கோடி என்ற இலக்கை எட்ட முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

எஸ்ஐபியில் ரூ.1 கோடி சேமிப்பது எப்படி?

ஒரு கோடி ரூபாயை சேமிப்பது என்பது அவ்வளவு சாதாரன விஷயம் அல்ல. அதற்கு தொடர்ந்து ஒழுக்கமான முறையில் முதலீடு செய்ய வேண்டும் என்பது அவசியமாக உள்ளது. எஸ்ஐபிஐ பொருத்தவரை நீண்ட காலம் முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தை பெற முடியும். எனவே ஒருவர் எஸ்ஐபியில் முதலீடு செய்து ரூ.1 கோடி நிதியை உருவாக்க வேண்டும் என்றால் அவர் பல ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : மேற்கு ஆசியா போர்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்குமா? நிலவரம் என்ன?

மொத்தம் 26 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்

ஒருவர் எஸ்ஐபியில் முதலீடு செய்து ரூ.1 கோடி நிதியை உருவாக்க வேண்டும் என்றால் அவர் 12 சதவீதம் லாபம் தரக்கூடிய திட்டத்தில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. 26 ஆண்டுகளுக்கும் அவர் ஒவ்வொரு மாதமும் எந்த வித தடங்களும் இன்றி ரூ.5,000 தொடர்ச்சியாக முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு 26 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும்போது மொத்தமாக ரூ.15.6 லட்சம் சேமிக்கப்பட்டு இருக்கும். இத்தனை ஆண்டுகளுக்கு 12 சதவீதம் வட்டியை கணக்கிட்டு பார்க்கும் பட்சத்தில் ரூ.84.4 லட்சம் வட்டியாக மட்டுமே கிடைக்கும்.

இதையும் படிங்க : பிபிஎஃப் கணக்கு தொடங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!

ஆனால், இந்த ரூ.5,000 முதலீட்டை ஒரே நிதியில் போட்டுவிடக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது ரூ.3,000 நிதியை இன்டெக்ஸ் ஃபண்டிலும் ரூ.2,000-த்தை ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளிலும் முதலீடு செய்ய வேண்டும் என கூறுகின்றனர். அவ்வாறு முதலீடு செய்யும் பட்சத்தில் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப போர்ட்ஃபோலியோ பேலன்ஸ் ஆகிவிடும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us