AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Budget 2026 Live Stream: தமிழ்நாடு பட்ஜெட் நேரலை.. எப்போது எங்கு எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!

Tamil Nadu Budget 2026 Date, Time: தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5, 2026 நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார்.

Tamil Budget 2026 Live Stream: தமிழ்நாடு பட்ஜெட் நேரலை.. எப்போது எங்கு எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!
தமிழக முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Aug 2026 16:15 PM IST

சென்னை, ஆகஸ்ட் 4 : தமிழக அரசு தனது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 5, 2026 நாளை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

தமிழ்நாடு பட்ஜெட் நேரலை எப்போது?

தமிழக பட்ஜெட்  சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 5, 2026 நாளை காலை 10 மணிக்கு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவுள்ளார்.  வேளாண்மை பட்ஜெட் அடுத்த நாள் ஆகஸ்ட் 6, 2026 அன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதையும் படிக்க : 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?..

எங்கு பார்க்கலாம்?

தமிழக பட்ஜெட்டை உடனுடக்குடன் டிவி9 தமிழ் இணையதள பக்கத்திலும் மற்றும் டிவி9 தமிழ் செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் உடனுக்குடன் நேரலையாகப் பார்க்கலாம். மேலும் பட்ஜெட்டின் போது வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் குறித்து  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

இந்த நிதி நிலை அறிக்கை தயார் செய்வதற்காக கடந்த ஜூலை 2, 2026 அன்று முதல்வர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூலை 31, 2026 வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைவாரியாகவும், புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..

மேலும் நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. ‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தமிழக அரசின் ஐந்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தல், உயர் கல்விக்கு பிணையில்லாமல் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us