AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.25,000 ஆக மாறும் பிஎஃப் உச்ச வரம்பு.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?

EPFO Wages Hike To 25000 Rupees | ஊழியர்களின் நலனுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நீண்ட நாள் கோரிக்கையான பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்த நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.25,000 ஆக மாறும் பிஎஃப் உச்ச வரம்பு.. வெளியான முக்கிய தகவல்.. என்ன தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Aug 2026 16:47 PM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், முக்கிய மாற்றம் ஒன்று அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஊழியர்களின் மிக நீண்ட கோரிக்கையான பிஎஃப் (PF – Provident Fund) சம்பள வரம்பில் மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் உச்ச வரம்பு ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல்?

தற்போதைய நிலவரப்படி தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, பிஎஃப் பணம் பிடித்தம் செய்ய உச்ச வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. இதனை ரூ.25,000 ஆக உயர்த்த வேண்டும் தொடர் வேண்டுகோல் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான், மத்திய நிதி அமைச்சகம் பிஎஃப் உச்ச வரம்பினை ரூ.25,000 ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கியுள்ளதாக மணிகண்ட்ரோல் பிரத்யேக செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளன.. இதனை செய்யவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!

பிஎஃப் பாதுகாப்பு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை உயரும்

இந்த அம்சத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இது சட்டமாக மாற்றப்படும். இந்த நிலையில், பிஎஃப் சம்பள உச்ச வரம்பு உயர்த்தப்படும். அவ்வாறு உச்ச வரம்பு உயர்த்தப்படு நிலையில், பிஎஃப் பாதுகாப்பு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன? எகிறும் எதிர்ப்பார்ப்பு

இந்த புதிய விதி அடிப்படை ஊதியம் ரூ.25,000 வரை கொண்டுள்ள ஊழியர்கள் அனைவருக்கும் பிஎஃப் பிடித்தம் கட்டாயமாக்கப்படும். அவர்கள் அனைவரும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுவார்கள். இது அவர்களின் ஓய்வுக்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us