இன்னும் இரண்டு வாரங்கள் தான் உள்ளன.. இதனை செய்யவில்லை என்றால் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
KYC For Gas Cylinder | இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சமையல் தேவைகளுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை தான் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்களை தொடர்ந்து பெற ஆகஸ்ட் 15, 2026-க்குள் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தங்களது சமையலுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை (LPG Gas Cylinder) பயன்படுத்துகின்றன. உஜ்வாலா திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம், இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் வரை கேஸ் சிலிண்டர் பயன்பாடு விரிவடைந்துள்ளது. இவ்வாறு பொதுமக்களின் முக்கிய வாழ்வாதாரமாக அது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கேஸ் சிலிண்டரில் இதனை செய்யவில்லை என்றால், கேஸ் சிலிண்டர்களை பெற முடியாது என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர்கள் குறித்து வெளியான முக்கிய தகவல் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இ கேஒய்சி சரிபார்க்க வேண்டியது அவசியம்
ஈரான் போர் காரணமாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மிக கடுமையான கேஸ் சிலிணர் தட்டுப்பாடுகளை சந்தித்தன. இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு தொடர்பான நடைமுறைகளை அரசு கடுமையாக்கியது. அதாவது, கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யும் காலம் உள்ளிட்டவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் பயனர்கள் ஆதார் எண்ணை கேஸ் இணைப்புடன் இணைக்கும் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் குறித்து அமலுக்கு வந்த முக்கிய விதிகள்.. என்ன என்ன?




ஏன் கேஒய்சி கட்டாயம்?
ஒரே பயனர்கள் இரண்டு முதல் மூன்று கேஸ் சிலிண்டர் இணைப்புகளை வைத்திருப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போலி பயனர்களை நீக்கம் செய்யவும், தகுதியுள்ள பயனர்களுக்கு மட்டும் கேஸ் சிலிண்டர்கள் சென்று சேறுவதை உறுதி செய்யும் விதமாக இந்த கேஒய்சி முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த முக்கிய செயல்முறையை செய்து முடிக்க இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு.. எவ்வளவு தெரியுமா?
சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்
அதாவது பயனர்கள் தங்களது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு இகேஒய்சி மேற்கொள்ள ஆகஸ்ட் 15, 2026 தான் கடைசி தேதியாக உள்ளது. அதற்கு பயனர்கள் இகேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் அவர்களுக்கு கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.