AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai On August 03 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், தங்கம் விலை இன்று உயர்வை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Aug 2026 10:24 AM IST

சென்னை, ஆகஸ்ட் 03 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 03, 2026) தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.13,000-த்திலேயே நீடித்து வரும் தங்கம்  விலை

ஜூன் மாதத்தில் தொடர் சரிவை சந்தித்து ரூ.13,000 வரை வந்த தங்கம், ஜுலை மாதத்தில் தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஒரு நாள் உயர்வை சந்திக்கும் தங்கம் மறுநாள் சரிவை சந்திக்கிறது. என்னதான் தங்கம் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.13,000-த்தை தாண்டாமல் உள்ளது. அதே சமயம் ரூ.13,000-க்கு கீழே செல்லாமலும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் குறித்து அமலுக்கு வந்த முக்கிய விதிகள்.. என்ன என்ன?

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 03, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,250-க்கும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us