கேஸ் சிலிண்டர் குறித்து அமலுக்கு வந்த முக்கிய விதிகள்.. என்ன என்ன?
New Gas Cylinder Rules From August 1, 2026 | கேஸ் சிலிண்டர்கள் தொடர்பான சில முக்கிய விதிகள அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவை இன்று (ஆகஸ்ட் 01, 2026) முதல் அமலுக்கு வந்துள்ளன. என்ன என்ன விதிகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் இன்று (ஆகஸ்ட் 01, 2026) தொடங்கியுள்ள நிலையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு முதல் தபால் சேவை கட்டணங்கள் வரை பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில், கேஸ் சிலிண்டர் தொடர்பான முக்கிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஈரான் போர் காரணமாக கேஸ் சிலிண்டர் முன்பதிவு உள்ளிட்டவை குறித்து முக்கிய விதிகள் அமலில் இருந்த நிலையில், தற்போது இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் தொடர்பாக என்ன என்ன புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டர் தொடர்பான புதிய விதிகள் அமல்
வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்காக கேஸ் சிலிண்டர்களுக்கு குழாய் வழி இயற்கை எரிவாயு சேவைகள், புதிய இணைப்புகள், இ கேஒய்சி, முன்பதிவு, விநியோகம் மற்றும் மானியம் உள்ளிட்டவை குறித்து சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. எல்பிஜி, பிஎன்ஜி சேவைகளை பயன்படுத்தும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் இந்த விதிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
இதையும் படிங்க : இன்று இரவு 12 மணிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் கவலை வேண்டாம்.. உங்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு உள்ளது!
பாரத் லைட் ஜிப் அறிமுகம்
புதிய எரிவாயு இணைப்புக்காக காத்திருப்பதை குறைக்க பாதர் பெட்ரோலியம் நிறுவனம், பாரத் லைட் ஜிப் என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் புதிய இணைப்பை விரைவாக பெறுவதோடு, எரிவாயு சிலிண்டர்களை தங்களது வீடுகளுக்கே டெலிவரி பெறும் சேவையையும் பெற முடியும். தற்போது மும்பையில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சேவை கிடைக்கிறது.
இதையும் படிங்க : 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
இ கேஒய்சி கட்டாயம்
எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு நுகர்வோருக்கு இகேஒய்சியை கட்டாயமாக்கியுள்ளன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இகேஒய்சி மேற்கொள்ளாத நுகர்வோருக்கு சிலிண்டர் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று எரிவாயு முகமைகள் வெளியிட்டுள்ள சமீபத்திய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?
இதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், ஏற்கனவே ஏராளமான நுகர்வோர் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.