30 நாட்களுக்கு மேல் எந்த மனுவும் நிலுவையில் இருக்கக் கூடாது – அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய முறையில் தீர்வு காண வேண்டும். மனுக்களின் நிலை குறித்து வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எந்த மனுவும் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1, 2026: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். எந்த மனுவும் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தங்கள் துறை சார்ந்த முக்கிய விவரங்கள் குறித்து அமைச்சர்களுக்கு அவ்வப்போது தகவல் அளிக்க வேண்டும் என அனைத்து துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்களுக்கும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பொதுவாக, பொதுமக்களிடமிருந்து தினசரி பல்வேறு மனுக்கள் பெறப்படுகின்றன. குறிப்பாக, முதலமைச்சரின் தனிப்பிரிவு (CM Cell) மூலமாகவும் ஏராளமான மனுக்கள் அரசுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தச் சூழலில், ஒவ்வொரு மனுவின் மீதும் 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை வேண்டும்:
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொதுமக்களிடமிருந்து பெறப்படும் அனைத்து மனுக்களுக்கும் உரிய முறையில் தீர்வு காண வேண்டும். மனுக்களின் நிலை குறித்து வாரந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எந்த மனுவும் 30 நாட்களுக்கு மேல் நிலுவையில் இருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: குற்றால அருவிகளில் அதிகரித்த நீர்வரத்து.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..
ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் வாரந்தோறும் திடீர் (சர்ப்ரைஸ்) ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, ஆய்வுகளை மேற்கொள்வதுடன், அதன் அறிக்கைகளையும் உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கள ஆய்வின் அறிக்கை விரைவில் சமர்பிக்க வேண்டும்:
மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் மாதந்தோறும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அதுகுறித்த அறிக்கைகளை பொதுத்துறை வாயிலாக தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படக்கூடிய வறட்சி நிலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “இது தவெக பிரச்சனை இல்லை, தமிழ்நாட்டின் பிரச்சனை!”.. மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் காட்டம்!!
இரண்டு நாட்களுக்கு முன்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்பாக அரசுக்கு முன்னெச்சரிக்கை பரிந்துரைகளை வழங்குவதற்காக, தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் உள்ளிட்ட 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், மத்திய அரசிடமிருந்து பெறப்பட வேண்டிய மாநில நிதி மற்றும் நிலுவைத் தொகைகளை விரைந்து பெற்றிட தேவையான நடவடிக்கைகளை துறைச் செயலாளர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.