Gold Price : மாதத்தின் முதல் நாளே சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Price Reduced and Silver Price Remain Same | சென்னையில் இன்று தங்கம் விலை சரிந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் 01, 2026 : தங்கம் விலை (Gold Price) தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், மூன்று நாள் தொடர் உயர்வுக்கு பிறகு இன்று (ஆகஸ்ட் 01, 2026) சரிவை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையற்ற தன்மை – தத்தளிக்கும் தங்கம் விலை
2026 தங்கத்திற்கு மிகவும் குழப்பமான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் தங்கம் பல மடங்கு உயர்வை சந்தித்தது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்தது. ஆனால், பிப்ரவரி மாதம் ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையே வெடித்த மோதல் காரணமாக நிலமை தலைகீழாக மாறி தங்கத்தை நிலையற்ற நிலைக்கு தள்ளியுள்ளது.
இதையும் படிங்க : Speed Post கட்டணங்களை மாற்றி அமைத்த தபால் துறை.. எவ்வளவு தெரியுமா?
2026, ஜனவரி மாதம் ரூ.16,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், தற்போது ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. புவிசார் பதற்றம், அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்தது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்தாலும் தங்கம் விலை ரூ.13,000-த்தை தாண்டாமலும், ரூ.13,000-க்கு கீழே செல்லாமலும் இருந்து வருகிறது.
இதையும் படிங்க : குழந்தைகளின் எதிர்காலத்திற்கு சேமிக்க விரும்புகிறீர்களா? எல்ஐசியின் சிறந்த 3 முதலீட்டுத் திட்டங்கள்
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 01, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.13,220-க்கும், சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.