AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Speed Post கட்டணங்களை மாற்றி அமைத்த தபால் துறை.. எவ்வளவு தெரியுமா?

India Post Changes Charges For Speed Post Services | இந்திய தபால் துறை பல்வேறு விதமான தபால் சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், தனது விரைவு தபால் சேவைகளுக்கான கட்டணங்களை இந்திய தபால் துறை மாற்றம் செய்துள்ளது.

Speed Post கட்டணங்களை மாற்றி அமைத்த தபால் துறை.. எவ்வளவு தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Jul 2026 19:17 PM IST

இந்திய தபால் துறை (Indian Postal Department) பல்வேறு வகையான தபால் சேவைகளை வழங்கி வருகிறது. கடிதங்களை அனுப்புவதற்காக இந்த தபால் சேவை தொடங்கப்பட்ட நிலையில், நாளைடைவில் தபால் நிலையங்கள் மூலம் தபால் அனுப்பும் பழக்கம் மக்கள் மத்தியில் குறைந்துவிட்டது. இருப்பினும் தபால் நிலையத்தில் போஸ்ட் மற்றும் பார்சல் சேவைகளை பரவலாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான், தனது போஸ்டல் மற்றும் பார்சல் சேவைகளின் கட்டணங்களை இந்திய தபால் துறை மாற்றி அமைந்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் நாளை (ஆகஸ்ட் 01, 2026) முதல் அமலுக்கு வர உள்ளன. இந்த நிலையில், எந்த எந்த சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தபால் சேவைகளின் கட்டணங்களை உயர்த்திய தபால் துறை

இந்தியாவில் உள்ள நகரங்கள் முதல் குக் கிராமங்கள் வரை, இந்திய தபால் துறையின் தபால் சேவை பயன்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் மட்டும்னறி அரசு, பொதுமக்களுக்கான ஆவணங்களை இந்த தபால் நிலையங்கள் மூலமே கொண்டு சேர்க்கிறது. இவ்வாறு பரவலாக தபால் துறையின் சேவைகள் பயன்படுத்தப்படும் நிலையில் தான், விரைவு தபால் சேவைகளுக்கான கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..

ஆவணம் மற்றும் பார்சல்களுக்கு தெளிவான வரையறை

இந்திய தபால் துறை ஆவணங்கள் மற்றும் பார்சல்களுக்கு தெளிவான வரையறையை வகுத்துள்ளது. அதாவது, அவற்றுக்கான தனித்தனி கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. முன்னதான அனைத்துக்கும் ஒரே விதமான கட்டணம் இருந்த நிலையில், தற்போது சேவைக்கு ஏற்ப கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றம் செய்யப்பட்ட கட்டண விவரங்கள்

24 மணி நேர விரைவு தபால் சேவை கட்டணம்

பொருட்களின் எடை மற்றும் தூரத்தை பொறுத்து ரூ.38 முதல் ரூ.186 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • 50 கிராம் எடையுள்ள பொருளை உள்ளூர் முகவரிக்கு அனுப்ப ரூ.38 கட்டணம்.
  • 50 கிராம் எடையுள்ள பொருளை இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அனுப்ப ரூ.94 கட்டணம்.

இதையும் படிங்க : வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.. மிஸ் செய்தால் எவ்வளவு அபராதம்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

48 மணி நேர விரைவு தபால் சேவை கட்டணம்

48 மணி நேர விரைவு தபால் சேவைக்கான கட்டணம் ரூ.61 முதல் ரூ.121 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Follow Us