இன்னும் ஒரு நாள் தான் இருக்கு.. ஜூலை 31-க்குள் இதை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது!
Important Update For Ration Card Holders | இந்தியாவில் ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் ஜுலை 31, 2026-க்குள் முக்கிய பணி ஒன்றை மேற்கொள்ள கூறியுள்ளனர்.
இந்தியாவில் உள்ள நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடுமங்களுக்கு மிகவும் பயன் அளிக்கும் ஒரு திட்டமாக தான் ரேஷன் கார்டு திட்டம் (Ration Card Scheme) உள்ளது. காரணம், ரேஷன் கார்டு மூலம் பொதுமக்களுக்கு இலவச அரிசி, மாணிய விலையில் சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் அட்டை திட்டத்தின் முக்கிய அம்சமாக இலவச அரிசி பெறுவதற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது, ஜூலை 31, 2026-க்குள் ரேஷன் கார்டில் இதனை செய்யவில்லை என்றால் இலவச அரிசி கிடைக்காது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஜூலை 31, 2026-க்குள் ரேஷன் கார்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணி என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரேஷன் கார்டில் கேஒய்சி மேற்கொள்வது கட்டாயம்
தற்போது ரேஷன் கடைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக, பொதுமக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு, அதன் மூலம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது, ரேஷன் அட்டை பயனர்கள் தங்களது ரேஷன் கார்டுகளில் கேஒய்சி (KYC – Know Your Customer) மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.




இதையும் படிங்க : EPFO : பிஎஃப் 75% விதி.. பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி.. முக்கிய விஷயங்கள் இவை தான்!
ஜூலை 31, 2026-க்குள் முடிக்கவில்லை என்றால் இலவச அரிசி இல்லை
அதாவது, ரேஷன் கார்டு பயனர்கள் தங்களது ரேஷன் கார்டில் கை ரேகை பதிவை செய்ய வேண்டும். தகுதியான குடும்பங்களுக்கு மட்டும் ரேஷன் அரிசி பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு தான் இந்த கேஒய்சி அம்சத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஜூலை 31, 2026-க்குள் கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : Gold : கையில் ரூ.1 லட்சம் இருந்தால் எவ்வளவு தங்கம் வாங்கலாம்?.. இந்த கணக்கை தெரிந்துக்கொள்ளுங்கள்!
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களதுன் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.