AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடந்த ஆண்டுக்கான வருமான வரியை இந்த ஆண்டு செலுத்தலாமா?.. வருமான வரித்துறை விதிகள் கூறுவது என்ன?

Rules For Late Income Tax Filing | குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், 2025 - 2026 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் 2026 - 2027 நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்ய முடியுமா?

கடந்த ஆண்டுக்கான வருமான வரியை இந்த ஆண்டு செலுத்தலாமா?.. வருமான வரித்துறை விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Jul 2026 15:11 PM IST

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒவ்வொரு நிதியாண்டும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் இந்த வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். சில காரணங்களால், கால அவகாசம நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், ஒவ்வொரு நிதியாண்டுக்கான வருமான வரியை அந்த நிதியாண்டே செலுத்துவது சிறப்பானது. இந்த நிலையில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரியை, இந்த நிதியாண்டில் தாக்கல் செய்யலாமா, அவ்வாறு வருமான வரி தாக்கல் செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடந்த ஆண்டுக்கான வருமான வரியை இப்போது தாக்கல் செய்யலாமா?

கடந்த ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் அல்லது தவறான தகவல்களை வழங்கியவர்கள் திருத்தப்பட்ட தகவல்கள் உடன் வருமான வரி தாக்கல் செய்யும் வாய்ப்பை வருமான வரித்துறை வழங்குகிறது. அதாவது வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பை நிதிச் சட்டம் 2025 கணிசமாக நீட்டித்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு நிறைவடைந்தாலும், அடுத்த 48 அதாவது 4 ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை வரி செலுத்துவோர் தாக்கல் செய்ய முடியும்.

இதையும் படிங்க : சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு.. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

48 மாதங்களாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்

இதற்கு முன்னதாக காலக்கெடுக்குள் வருமான வரி தாக்கல் செய்ய முடியாதவர்கள் 24 மாதங்களுக்குள்ளாக தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது. அதுதான் தற்போது 48 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரி செலுத்தாதவர்கள், கூடுதல் வருமானத்தை குறிப்பிட விரும்பும் நபர்கள், விடுபட்ட வரியை செலுத்த விரும்பும் நபர்கள் ஆகியோர் வருமான வரி தாக்கல் செய்யலாம்.

இதையும் படிங்க : வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க முடியுமா?.. அதுக்கு ஒரு வழி உள்ளது.. என்ன தெரியுமா?

எவ்வளவு கூடுதல் வரி செலுத்த வேண்டும்?

இந்த அம்சத்தின் மூலம் வரி தாக்கல் செய்யும் பட்சத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். அதாவது, 12 மாதங்கள் என்றால் 25 சதவீதம் கூடுதல் வரி, 24 மாதங்கள் என்றால் 50 சதவீதம் கூடுதல் வரி, 36 மாதங்கள் என்றால் 60 சதவீதம் கூடுதல் வரி மற்றும் 36 முதல் 48 மாதங்கள் என்றால் 70 சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us