வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்க முடியுமா?.. அதுக்கு ஒரு வழி உள்ளது.. என்ன தெரியுமா?
Tips To Get Financial Freedom Easily | தினமும் வேலைக்கு செய்து மாதம் குறைந்த சம்பளம் வாங்குவது பலருக்கும் எரிச்சலான ஒன்றாக உள்ளது. ஆனால், வேலைக்கே செல்லாமல் வீட்டிலேயே இருக்க ஒரு வழி உள்ளது. அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
மாதிரி புகைப்படம்
- முதலில் உங்களிடம் எவ்வளவு பணம் இருந்தால் வேலைக்கு செல்லாமல் நீங்கள் வீட்டில் இருக்க முடியும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதனை கண்டறியும் பட்சத்தில் உங்களால் உங்களால் மிக சுலபமாக திட்டமிடலாம். அதற்கு உங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான பணத்தை கணக்கிட்டு அதனை 25 ஆல் பெருக்க வேண்டும்.
- அதாவது உங்களது ஆண்டு செலவு ரூ.4 லட்சம் என்றால், உங்களுக்கு சுமார் ரூ.1 கோடி பணம் தேவைப்படும். இதுதான் உங்களது இலக்கு. நீங்கள் இந்த தொகையை உருவாக்கி விட்டீர்கள் என்றால், அதனை முதலீடு செய்து உங்களது ஆயுள் முழுவதும் நீங்கள் வேலைக்கு செல்லாமல், நிதி சிக்கல் இல்லாமல் வீட்டில் இருக்கலாம்.
- உங்களை சுற்றி இருக்கும் நபர்கள் ரூ.50,000 சம்பாதித்து அந்த பணம் முழுவதையும் செலவு செய்யலாம். ஆனால், நீங்கள் அப்படி இருக்க கூடாது. ரூ.20,000 பணம் சம்பாதித்தாலும் அதில் ரூ.10,000 முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு நீங்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டில் கவனத்தை செலுத்தும்போது விரைவில் இலக்கை எட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதற்காக நீங்கள் மேற்கொள்ளும் அத்தியாவசியமற்ற செலவுகளை குறைப்பது உங்களின் இலக்கை நீங்கள் மிக வேகமாக அடைய உதவி செய்யும். அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் பெரிய மற்றும் அத்தியாவசிய செலவுகளை தவிர்ப்பது அல்லது குறைப்பது இந்த இலக்கை நீங்கள் விரைவில் அடைய வழிவகை செய்யும்.
- ஒவ்வொரு நாளும் வேலைக்கு செல்லும்போது, வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் பலரது கனவாக இருக்கும். இப்படி கூறும்போது கனவு காணாமல் வேலைக்கு போ என குடும்ப உறுப்பினர்கள் கூறுவர். ஆனால், முறையாக திட்டமிடும் பட்சத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கலாம். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Follow Us




