சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு.. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
Pradhan Mantri Awas Urban Yojana 2.0 Scheme | மத்திய அரசு செயல்படுத்தி வரும் பிரதான் மந்திரி ஆவாஸ் அர்பன் யோஜனா திட்டத்தில் புதியதாக சுமார் 1 கோடி புதிய வீடுகளை கட்டி தர மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்திய குடிமக்கள் மத்தியில் இருக்கும் மிகப்பெரிய ஆசை தான் சொந்தமாக வீடு கட்டுவது. பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கடன் வாங்கியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. இவ்வாறு இந்திய பொதுமக்களின் மிகப்பெரிய கனவாக சொந்த வீடு உள்ள நிலையில், ஏழை எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் கனவை நனவாக்கும் வகையில் அரசு ஒரு அசத்தல் அம்சத்தை வழங்குகிறது. அதாவது, இந்தியாவில் உள்ள சுமார் 1 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு இலக்கு நிர்ணயத்தித்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎம் கிசான் ஆவாஸ் யோஜனா திட்டம் 2.0
ஏழை, எளிய மற்றும் நடுத்த குடும்பங்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் பணியை தான் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் (Pradhan Matri Awas Yojana Scheme) மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் 2.0 என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பயணம் மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்?
1 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு இலக்கு
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான், அடுத்த 5 ஆண்டுகளுக்குள்ளாக இந்த திட்டத்தின் மூலம் புதியதாக 1 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடு கட்டி தருவதை மத்திய அரசு இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
இதையும் படிங்க : வேளாண் பட்ஜெட் 2026.. பச்சைத் துண்டுடன் களமிறங்கிய 10 அமைச்சர்கள்.. விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு!
என்ன என்ன உதவிகள் வழங்கப்படுகிறது?
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அர்பன் திட்டத்தில் மத்திய அரசு 4 சேவைகளை வழங்குகிறது. அதாவது, சொந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு வீடு கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. பழைய வீடு வைத்துள்ளவர்கள் அதனை சீரமைத்துக்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க நினைப்பவர்களும் மானிய விலையில் வீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.