வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுமா?
Is Income Tax Deadline Is Extending? | இந்தியாவில் ஐடிஆர் -1 மற்றும் ஐடிஆர் -2 படிவங்களை பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2026 ஆக உள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து பார்க்கலாம்.
2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் (Income Tax Filing) செய்வதற்காக கடைசி தேதியா ஜூலை 31, 2026 உள்ளது. அதாவது, இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இன்னும் சரியாக மூன்று நாட்களில் வருமான வரி தாக்கல் செய்வதற்காக காலக்கெடு நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படுமா என வரி செலுத்துபவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் நீட்டிக்கப்படுமா, அது குறித்து அரசு கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வருமான வரி தாக்கல்
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில் 2026 – 2027 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யும் பணிகள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதாவது, பலரும் ஜூன் மாதம் முதலே வருமான வரி தாக்கல் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 4 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!




இத்தனை கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்திருந்தாலும், பலர் இன்னும் வருமான வரி தாக்கல் செய்யாமல் உள்ளனர். அதாவது, கடைசி தேதி நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கிவிட்ட நிலையில் ஒரே நேரத்தில் பலரும் வருமான வரி தாக்கல் செய்ய முயற்சி செய்வதால் இணையதளம் முடங்குவது உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுகிறது.
ஜூலை 31, 2026 தான் கடைசி தேதி?
2025 ஆம் ஆண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதியாக வருமானவரித்துறை மாற்றி அறிவித்தது. இந்த நிலையில், இந்த ஆண்டும் அத்தகைய அறிவிப்பு ஏதேனும் வெளியாகுமா என வரி செலுத்தும் நபர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!
நிறுவனங்களில் பணி செய்து சம்பாதிக்கு நபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெரும் நபர்கள் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கான கடைசி தேதி தற்போது வரை ஜூலை 31, 2026 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.