AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TN Budget 2026: பள்ளி கல்வித்துறை பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்னென்ன?.. முழு விவரம்!!

TN Budget: வரவிருக்கும் தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு சுமார் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 18,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புதல், பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்தல், பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்த முழுமையான விவரங்கள்.

Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 26 Jul 2026 14:32 PM IST
வரவிருக்கும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக அரசின் புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இச்சூழலில், மாநிலத்தின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் பள்ளி கல்வித்துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் இந்த வரவு-செலவுத் திட்டத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

1 / 5
ஒவ்வொரு ஆண்டும் தமிழக பட்ஜெட்டில் மற்ற துறைகளைக் காட்டிலும் பள்ளி கல்வித்துறைக்கே அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கமாகும். கடந்த பட்ஜெட்டில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடான ரூ.4.5 லட்சம் கோடியில், பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் சுமார் ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு ஒட்டுமொத்த பட்ஜெட் ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி கல்வித்துறைக்கு மட்டும் ரூ.50,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

2 / 5
மாநிலம் முழுவதும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பிரிவுகளில் 18,000-க்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஏற்கனவே TET (ஆசிரியர் தகுதித் தேர்வு) எழுதி தேர்ச்சி பெற்று, சுமார் 80,000 பேர் வேலைவாய்ப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். TRB மூலம் இவர்களுக்கு உரிய நேர்காணல் மற்றும் கலந்தாய்வு நடத்தி இக்காலியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.

3 / 5
பல தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், ஒரே வகுப்பறையில் வெவ்வேறு வகுப்புகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தும் சூழல் நிலவுகிறது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதன் மூலமே இதற்குக் தீர்வு காண முடியும். இசை, ஓவியம், தையல், கணினி, உடற்கல்வி, தோட்டக்கலை போன்ற சிறப்புப் பாடங்களைக் கற்பிக்கும் 10,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த தொகுப்பூதியத்தில் (சுமார் ₹12,000) பணியாற்றி வருகின்றனர். இவர்களைக் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

4 / 5
30 ஆண்டுகளுக்கு மேலான பழமையான மற்றும் ஆபத்தான நிலையிலுள்ள பள்ளி கட்டடங்களை அடையாளம் கண்டு, புதிய கட்டடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 37,000 அரசு பள்ளிகளிலும் போர்க்கால அடிப்படையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மாணவர்களின் உடல்திறனை மேம்படுத்த உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும். மேலும், கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டிகள் போன்ற படைப்பாற்றல் திறன்களை ஊக்குவிக்கும் வழிகாட்டி முறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

5 / 5
Follow Us