AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!

Scanning Face Facility In Ration Card | ரேஷன் கார்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார்.

ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை.. அமைச்சர் வெங்கடரமணன் முக்கிய தகவல்!
அமைச்சர் வெங்கடரமணன்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 27 Jul 2026 07:51 AM IST

கிருஷ்ணகிரி, ஜூலை 27 : தமிழகத்தில் (Tamil Nadu) வரும் காலத்தில் ரேஷன் கடைகளில், பயனர்களின் முகத்தை ஸ்கேன் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் குறித்து அவர் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரேஷன் அட்டையில் மேற்கொள்ளப்படும் புதிய புதிய மாற்றங்கள்

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக ரேஷன் கார்டு (Ration Card) உள்ளது. தமிழகத்திலும் கோடிக்கணக்கான குடும்பங்கள் இந்த ரேஷன் அட்டை திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். முன்னதாக இந்த ரேஷன் அட்டை திட்டத்தில் புத்தக வடிவிலான ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன.

இதையும் படிங்க : தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெடிக்கப்போகும் வெடிகுண்டு.. தயாராகும் ஊழல் பட்டியல்.. நிதித்துறை அமைச்சர் அதிரடி!

பின்னர் தொழில்நுட்ப வளர்சிக்கு ஏற்ப ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. இந்த ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பயனர்களின் கைரேகை ஸ்கேன் செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்ட பிறகே ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் தான், ரேஷன் அட்டை தொடர்பான மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்யும் அம்சம் – அமைச்சர் தகவல்

கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாநிலம் முழுவதும் இதுவரை 20,000 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் ரேஷன் கார்டுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டில் உள்ள அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை.. விண்ணப்பிக்க தவறியவரா நீங்கள்? வெளியானது அதிரடி அறிவிப்பு!

அதற்கான பணிகள் 97 சதவீதம் வரை முடிவடைந்துள்ளது. ரேகை பதிவாகாத நபர்களுக்கு கண்விழி பதிவு செய்யப்படுகிறது. இனி வரும் காலத்தில் ரேஷன் கடைகளில் முகத்தை ஸ்கேன் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us