AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை குறைத்த மத்திய அரசு.. விலையில் மாற்றம் ஏற்படுமா?

Government Cuts Windfall Tax | சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருளுக்கான ஏற்றுமதி வரியை மத்திய அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதி வரியை குறைத்த மத்திய அரசு.. விலையில் மாற்றம் ஏற்படுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Sep 2026 11:41 AM IST

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் உள்ளிட்டவற்றின் மீதான ஏற்றுமதி கூடுதல் வரிகளை (Windfall Tax) மத்திய அரசு (Central Government Of India) கனிசமாக குறைத்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைத்துள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விண்ட்ஃபால் வரியை குறைத்த மத்திய அரசு

மத்திய அரசின் மறு ஆய்வு  கூட்டம் இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அரசின் இந்த முடிவின் மூலம் டீசல் மீதான் ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.5 குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லிட்டருக்கான வரி ரூ.20 ஆக குறைந்துள்ளது. மேலும், இதற்கு முன்னதாக விதிக்கப்பட்டு இருந்த ரூ.1 சாலை மற்றும் உட்கட்டமைப்பு கூடுதல் வரியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சேமிப்பு Vs கடன்.. திடீர் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

விமான எரிபொருள் வரி குறைப்பு

இதேபோல விமான எரிபொருளுக்கான வரியும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விமான எரிபொருள் ஏற்றுமதி வரி, லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அது வெறும் ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி லிட்டருக்கு ரூ.1 குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லிட்டருக்கான ஏற்றுமதி வெறும் 50 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : EPFO : மாதம் மாதம் கணக்கில் பிஎஃப் பணம் முறையாக வரவு வைக்கப்படுகிறதா?.. தெரிந்துக்கொள்வது எப்படி?

உள்நாட்டு பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

மத்திய அரசு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வரியை தான் குறைத்துள்ளது. ஆனால், உள்ளூர் கலால் வரியில் எந்தவித மாற்றத்தையும் மேற்கொள்ளாமல் வைத்துள்ளது. கலால் விலையில் மாற்றம் செய்யப்படும்போது தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும். எனவே, விண்ட்ஃபால் வரி குறைக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலையில்  எத்தகைய உடனடி மாற்றங்களையும் மேற்கொள்ளாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us