MDR கட்டணம் அமலுக்கு வந்தாலும் UPI-ல் இவை எல்லாம் இலவசம் தான்!
Merchant Discount Rate From October 15, 2026 | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் யுபிஐ பயன்பாடு அதிகமாக உள்ளது. இந்த நிலையில், அக்டோபர் 15, 2026 முதல் யுபிஐ-ல் இந்த எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வர உள்ளதாக என்சிபிஐ அறிவித்துள்ளது.
தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தான் மத்திய அரசு எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் பண பரிவர்த்தனை முறையில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இருப்பினும், இன்னும் இந்த ஐந்து பண பரிவர்த்தனை சேவைகள் யுபிஐ-ல் இலவசமாகவே கிடைக்கின்றன. இந்த நிலையில், யுபிஐ-ல் இலவசமாக உள்ள சேவைகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
எம்டிஆர் கட்டணம் – NCPI வெளியிட்ட அறிக்கை
இந்த எம்டிஆர் கட்டணம் தொடர்பாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2,000-க்கு குறைவாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகள் இலவசம என கூறியுள்ளது. ஒருவேளை ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு 0.4 சதவீதம் கட்டணம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த கட்டணம் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது.
இதையும் படிங்க : Content Creation மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த இளைஞர்.. ஆன்லைன் மூலம் அசத்தி காட்டியது எப்படி?




எந்த எந்த பரிவர்த்தனைகள் இலவசம்?
- தனிநபர்கள் மேற்கொள்ளும் பண பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான கட்டணமும் விதிக்கப்படாது. இந்த எம்டிஆர் கட்டணம், தனிநபர் – வர்த்தகர்கள் அடிப்படையிலான பேமெண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். இதில் ரூ.1 லட்சம் வரை 24 மணி நேரத்தில் பண பரிவர்த்தனை செய்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
- யுபிஐ மூலம் ஒருவர் மற்றவரிடம் இருந்து பணத்தை பெறவோ, அல்லது பணத்தை அனுப்பவோ எந்தவித கட்டணமும் இல்லை.
- ஒரு தனிநபர் தனது கணக்கில் இருந்து வர்த்தகருக்கு ரூ.1,999 வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் பணத்தை அனுப்பலாம். ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
- சிறு வியாபாரிகள் ஒரு மாதம் முழுவதும் தங்களது கணக்கில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவாகவே பணத்தை பெற்றுள்ளார் என்றால், அவருக்கு எம்டிஆர் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
- இந்த கட்டண முறை அமலுக்கு வந்தாலும், வழக்கம் போல யுபிஐ மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஒருவர் எந்த வயதில் எவ்வளவு சம்பாதிக்க வேண்டும்?.. நடைமுறைக்கு சாத்தியமா?
மேலே குறிப்பிட்டுள்ள பண பரிவர்த்தனை விதிகளில் எம்டிஆர் கட்டண முறை அமலுக்கு வந்தாலும், எந்தவித மாற்றமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.