AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Content Creation மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த இளைஞர்.. ஆன்லைன் மூலம் அசத்தி காட்டியது எப்படி?

Young Man Built 1.6 Crores From Content Creation | இளைஞர்கள் பலரும் சமூக ஊடகங்களை பொழுதுபோக்குக்காக பயன்படுத்திக்கொண்டு இருக்கும் சூழலில் இளைஞர் ஒருவர் கன்டன்ட் கிரியேஷன் மூலம் ரூ.1.6 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அவர் என்ன செய்துள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Content Creation மூலம் ரூ.1.6 கோடி சம்பாதித்த இளைஞர்.. ஆன்லைன் மூலம் அசத்தி காட்டியது எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 14 Sep 2026 21:02 PM IST

உலக அளவில் மிக பிரபலமாக உள்ள ஒரு தொழில் தான் கன்டன்ட் கிரியேஷன் (Content Creation). பலரும் தங்களுக்கு பிடித்த துறைகளில் கன்டன்ட் கிரியேஷன் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். வாழ்வாதாரத்தை ஈடு செய்வதற்கு இந்த தொழில் சரியானதாக இருக்கும். ஆனால் இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கன்டன்ட் கிரியேஷன் மூலம் சுமார் ரூ.1.6 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இந்த நிலையில், கன்டன்ட் கிரியேஷன் செய்து சாதனை படைத்த அந்த இளைஞரின் வெற்றிக் கதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

18 வயது முதல் விடாமுயற்சி – சாதித்து காட்டிய இளைஞர்

18 வயது முதல் பிரீலான்சிங் மற்றும் ஆன்லைன் தொழில் செய்து, இந்த இளைஞர் சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமன்றி, அந்த இளைஞர் தான் சம்பாதித்த சுமார் ரூ.1.6 கோடி பணத்தை எங்கு வைத்துள்ளார் என்ற விவரத்தையும் பகிர்ந்துள்ளார். அவர் தான் பணம் சம்பாதித்தோம் என்ற அவசரத்தில் செலவு செய்யாமல், பெரும் பகுதியை முதலீட்டிலேயே வைத்துள்ளார்.

இதையும் படிங்க : EPFO : இனி On Time-ல் பிஎஃப் பணம் கைக்கு வரும்.. விதிகளை கடுமையாக்கிய இபிஎஃப்ஓ!

என்ன என்ன முதலீடுகளை செய்துள்ளார்?

  • இந்தியன் ஈக்விட்டீஸ் அக்கவுண்டுகளில் சுமார் ரூ.90 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.
  • வங்கி கணக்கு இருப்பு மற்றும் கையில் பணமாக சுமார் ரூ.45 லட்சத்தை வைத்துள்ளார்.
  • ரியல் எஸ்டேட்டில் சுமார் ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
  • அமெரிக்க பங்குகளில் சுமார் ரூ.7.5 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
  • மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.5 லட்சம் முதலீடு செய்து வைத்துள்ளார்.
  • கிரிப்டோ மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் ரூ.4 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

இதையும் படிங்க : உங்கள் கனவுகளை நனவாக்கும் ஃப்ரீடம் ஃபண்ட்.. அப்படி என்றால் என்ன.. முழு விவரம் இதோ!

பெரும்பாலான இளைஞர்கள் தங்களது ஓய்வு நேரங்களின்போது எந்த வேலையும் செய்யாமல், மொபைல் போனை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், இந்த இளைஞரோ மொபைல் போன் மூலமே கன்டன்ட் கிரியேஷன் செய்து கோடிகளில் வருமானம் ஈட்டியுள்ளார். பலருக்கு உதாரணமாக இந்த இளைஞர் மாறியுள்ளார்.

Follow Us