AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உங்கள் கனவுகளை நனவாக்கும் ஃப்ரீடம் ஃபண்ட்.. அப்படி என்றால் என்ன.. முழு விவரம் இதோ!

What Is Freedom Fund | கல்வி செலவுகள், மருத்துவ செலவுகள், திருமண செலவுகள் என ஒவ்வொன்றையும் சமாளிக்க தனித்தனி திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் தான், கனவுகளை நனவாக்க இந்த ஃப்ரீடம் ஃபண்ட் திட்டம் உதவியாக உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் கனவுகளை நனவாக்கும் ஃப்ரீடம் ஃபண்ட்.. அப்படி என்றால் என்ன.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Sep 2026 11:39 AM IST

செய்யும் வேலை பிடிக்கவில்லை, பணியில் இருந்து விலகி விடலாம் என பலரும் நினைப்பர். ஆனால், அவர்களால் அதனை செய்ய முடியாது. அதற்கு காரணம், வேலையை விட்டுவிட்டால் அடுத்த மாத செலவுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான். இத்தகைய சூழலில் இருப்பவர்களுக்கு தான் ப்ரீடம் ஃபண்ட் திட்டம் (Freedom Fund Scheme) பயனுள்ளதாக இருக்கும். மியூச்சுவல் ஃப்ணட் திட்டம் (Mutual Fund Scheme) தெரியும், அது என்ன ஃப்ரீடம் ஃபண்ட் திட்டம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃப்ரீடம் ஃபணட் திட்டம் என்றால் என்ன?

ஃப்ரீடம் ஃபண்ட் திட்டம் என்றவுடன் பலரும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டம் அல்லது மியூச்சுவல் ஃப்ணட் போன்ற திட்டம் என நினைத்துக்கொள்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. இது ஒரு வகையான சுய சேமிப்பு திட்டம் தான். அதாவது, நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், அதற்காக நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டிய நிதி தான் இது. இதனை தான் ஃப்ரீடம் ஃபண்ட் திட்டம் என அழைக்கிறார்கள்.

இதையும் படிங்க : வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!

நீங்கள் பல நாட்களாக செய்ய நினைத்துக்கொண்டு இருக்கும் ஒரு விஷயத்தை செய்வதற்கான தொகையை சேமிப்பது தான் இந்த ஃப்ரீடம் ஃபண்ட் திட்டமாகும். இதில் முதலீடு செய்ய வங்கிகளுக்கோ, அஞ்சலங்களுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே திட்டமிட்டு முதலீடு செய்துக்கொள்ளலாம். புதியதாக தொழில் தொடங்க, ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள, வயதான பெற்றோரை பராமரிக்க என உங்களது தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் இதனை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

எமெர்ஜென்சி ஃபண்ட் Vs ஃப்ரீடம் ஃப்ணட்

இதேபோன்ற ஒரு முறை தான் எமெர்ஜென்சி ஃபண்ட். இந்த நிலையில், இவை இரண்டுக்குமான வித்தியாசம் என்னவென்று உங்களுக்கு கேள்வி எழலாம். இரண்டுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது அடிப்படை தேவைகளை மையமாக கொண்டு சேமிப்பது தான் எமெர்ஜென்சி ஃபண்ட். ஆனால், அடிப்படை தேவைகளையும் தாண்டி ஒரு விஷயத்தை செய்ய வேண்டும், ஒரு தேவையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என பணத்தை சேமிப்பு அல்லது முதலீடு செய்வது தாம் ஃப்ரீடம் ஃப்ணட் திட்டம் ஆகும்.

Follow Us