AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!

Bengaluru Youngsters Created Business With 2 Crore Rupees In Just 10 Month | தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலரும் தொழில் தொடங்கும் முடிவை எடுப்பதில்லை.

வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!
தொழில் தொடங்கிய நண்பர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 10 Sep 2026 17:34 PM IST

தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், தொழில் தொடங்கினால் அது வெற்றி பெறுமா, அந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் பலரும் தொழில் தொடங்குவதில்லை. இவற்றை எல்லாம் சமாளித்துக்கொள்ளலாம் என நினைத்து தொழில் தொடங்கிய பலர் தோல்வியையும் சந்தித்துள்ளனர். இதுதான் பலரும் தொழில் தொடங்க பெரிய தடையாக உள்ளது. இந்த நிலையில் தான், பெங்களூரில் (Bengaluru) ஃபுட் டிரக் தொழில் (Food Truck Business) மூலம் இருவர் வெறும் 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம் ஈட்டி அசத்தியுள்ளனர். Kried ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிரெண்டுக்கு ஏற்ப தொழில் தொடங்கி அசத்திய இருவர்

பெங்களூரை சேர்ந்த குஷால் ரெட்டி மற்றும் சாஹக் ஹெயின் ஆகியோர் இணைந்து தொழில் தொடங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். தொழில் தொடங்க வேண்டும் என்றதும் அவர்களின் சிந்தணை உணவுத் துறை பக்கம் சென்றுள்ளது. அதன்படி, வெறும் ரூ.4 லட்சம் முதலீட்டில் அவர்கள் கிளவுட் கிட்சன் தொழிலை தொடங்கியுள்ளனர். கிளவுட் கிட்சன் என்றால் இணையத்தின் வாயிலாக மட்டுமே உணவு ஆர்டர் எடுக்கப்பட்டு, டெலிவரி செய்யப்படும். ஆனால், இந்த தொழிலிலும் செலவுக்கு குறைச்சல் இல்லாமல் தான் இருக்கும்.

இதையும் படிங்க : பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட்டை உறுதிபடுத்துவது எப்படி? அப்போ இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க

உணவு டெலிவரி செய்ய வேறு சில நிறுவணங்களின் சேவையை நம்பியிருந்த நிலையில், அதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த நிறுவனம் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்போது தான் குஷால் ரெட்டி மற்றும் சாஹக் ஹெயின் இணைந்து எப்படியாவது இந்த தொழிலில் முன்னேறி காட்ட வேண்டும் என்ற குறிக்கோலோடு இலக்கை நோக்கி ஓட தொடங்கியுள்ளனர். அதன்படி, இந்த முறை சென்னையில் பிரைடு சிக்கன், பர்க்கர் ஃபுட் டிரக்கை தொடங்க முடிவு செய்தனர். முதல் முறை செய்த தவறுகளை இந்த முறையும் செய்யக்கூடாது என திட்டமிட்டு அவர்கள் பணியாற்றியுள்ளனர்.

10 மாதத்தில் ரூ.2 கோடி வருமானம் பார்த்து அசத்தல்

இந்த முயற்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், வெறும் 10 மாதங்களில் இவர்கள் இருவரும் இணைந்து ரூ.2 கோடி வருமானம் பெற்று அசத்தியுள்ளனர்.

Follow Us