தொலைந்த கிரெடி கார்டில் வேறு ஒருவர் செலவு செய்தால், கடனுக்கு யார் பொறுப்பு?
Credit Card Money Spending Rules | கிரெடிட் கார்டில் பணம் செலவு செய்வதற்கு சில விதிகள் உள்ளன. இந்த நிலையில், காணாமல் போன கிரெடிட் கார்டில் வேறு ஒருவர் செலவு செய்தால் அந்த பணத்திற்கு யார் பொறுப்பு என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
தற்போதைய காலக்கட்டத்தில் பலரும் தங்களது நிதி தேவைகளுக்காக கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்துகின்றனர். செலவு செய்த பணத்தை 40 நாட்களுக்கு பிறகு திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கப்படுவதன் காரணமாக இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனவே தான் பலரும் இதனை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டில் சில விதிகளை முறையாக பின்பற்றினால், எந்தவித சிக்கலும் இல்லாமல் பணத்தை செலுவு செய்து கூடுதலாக தொகையை செலுத்தாமல் இருக்கலாம். ஆனால், ஒருவேளை சில தவறுகளை செய்தால் கடும் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.
அத்தகைய முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் பணத்தை உரிய நேரத்தில் திருப்பி செலுத்துதல். பணத்தை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தவில்லை என்றால் கூடுதல் வட்டி உள்ளிட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நிலையில், கிரெடிட் கார்டு தொலைந்து, அதனை வேறு ஒருவர் பயன்படுத்தினால் அந்த கட்டணத்தை யார் செலுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிரெடிட் கார்டு தொலைந்தவுடன் இவற்றை செய்யுங்கள்
உங்கள் கிரெடிட் கார்டு தொலைந்த உடன் முதல் வேலையாக அதனை பிளாக் செய்யுங்கள். இதனை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலிகள் மூலமே மேற்கொள்ளலாம். அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்குகிறது. அதாவது, செயலிகளில் கிரெடிட் கார்டு பக்கத்தில் Freeze என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கார்டை பிளாக் செய்துக்கொள்ளலாம்.




இதையும் படிங்க : வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!
வேறு ஒருவர் பணத்தை செலவு செய்தால் யார் திருப்பி செலுத்த வேண்டும்?
நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை பிளாக் செய்வதற்கு முன்னதாகவே அதில் இருக்கும் பணம் செலவு செய்யப்பட்டால், என்ன செய்வது என்ற கேள்விக்கு உங்களுக்கு இருக்கலாம். எப்போதுமே கிரெடிட் கார்டு தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனடியாக வங்கியிடம் அது குறித்து தெரிவிக்க வேண்டும். நீங்கள் புகார் அளித்தும் வங்கியின் தவறாலோ அல்லது வங்கி சிஸ்டத்தின் தவறாலோ உங்களது கிரெடிட் கார்டில் இருந்து பணம் செலவு செய்யப்பட்டால் அதற்கு வங்கி தான் வாடிக்கையாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகள் கூறுகின்றன.
இதையும் படிங்க : MIS திட்டம்.. முதலீடு செய்பவர் இறந்தால் யாருக்கு பணம் செல்லும்?.. விதிகள் கூறுவது என்ன?
எனவே, கிரெடிட் கார்டு தொலைந்தவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.