AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இனி ஏடிஎம் கார்டுகளை, ஏடிஎம் மூலமே பெற்றுக்கொள்ளலாம்.. வருகிறது அசத்தல் அம்சம்!

Customers Can Get ATM Card From ATM Machines Itself | புதியதாக் வங்கி கணக்கு தொடங்கும் நபருக்கு தபால் மூலம் ஏடிஎம் கார்டு அனுப்பப்படும். இந்த நிலையில் தான், ஏடிஎம் இயந்திரம் மூலமே ஏடிஎம் கார்டுகளை பெற்றுக்கொள்ளும் அசத்தல் அம்சம் அறிமுகமாக உள்ளது.

இனி ஏடிஎம் கார்டுகளை, ஏடிஎம் மூலமே பெற்றுக்கொள்ளலாம்.. வருகிறது அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Sep 2026 12:52 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் வங்கிகளுக்கு சென்று படிவத்தை நிரப்பி, பணத்தை எடுப்பதற்கான எந்தவித அவசியமும் இல்லை. மாறாக ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் மூலமே பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை எடுக்க தான் ஏடிஎம் கார்டுகள் உள்ளன. என்னதான், பணத்தை எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இல்லை என்றாலும், ஏடிஎம் கார்டு பெற வங்கிக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அல்லது மொபைல் செயலிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதன்பிறகு, ஏடிஎம் கார்டு கையில் கிடைத்தவுடன், ஏடிஎம் மையத்திற்கு சென்று ஆக்டிவேட் செய்ய வேண்டும். இந்த நிலையில் தான், வேலைகளை சுலபமாக்க அட்டகாசமான அம்சம் ஒன்று விரைவில் அறிமுகமாக உள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி மிக சுலபமாக ஏடிஎம் கார்டு பெறலாம்

வழக்கமாக வங்கிகளின் புதியதாக கணக்கு தொடங்கும்போது புதிய ஏடிஎம் கார்டு வழங்கப்படும். இந்த ஏடிஎம் கார்டு, உரிய நபரின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து, வாடிக்கையாளர்கள் மிக விரைவாக ஏடிஎம் கார்டு பெற்றுக்கொள்ளும் வகையில் அசத்தல் அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : Gold Price : 2050-ல் தங்கம் விலை என்னவாக இருக்கும்?.. வெளியான அதிர்ச்சி தகவல்!

ஏடிஎம் இயந்திரங்களே ஏடிஎம் கார்டுகளை பிரிண்ட் செய்து கொடுக்கும்

வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம் இயந்திரங்கள் மூலமாகவே தங்களுக்கு விருப்பமான RuPay கார்டுகளை பெற்றுக்கொள்ள முடியும். மும்பையில் நடைபெற்ற Fintech Fest 2026 நிகழ்ச்சியின் போது மத்திய அரசின் நிதி சேவைகள் துறை மூன்று முக்கிய  திட்டங்களை அறிவித்தது. அதில் ஒன்றுதான் இது. அதாவது, ஏடிஎம் இயந்திரங்களே நமக்கான ஏடிஎம் கார்டுகளை பிரிண்ட் செய்து கொடுத்துவிடும்.

இதையும் படிங்க : இன்றே கடைசி.. நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை.. ஏடிஎம்-லும் பணம் கிடைக்காதா?

என்ன என்ன வகை கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம்

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் National Common Mobility Cards எனப்படும் NCMC அட்டைகளை நேரடியாக ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் பெற்று, உடனடியாக வங்கி சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us