AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இளைஞரின் வயிற்றில் கருப்பை.. கருவுறாமை பரிசோதனையின்போது தெரியவந்த ஷாக் உண்மை!

Doctors Found 26 Years Old Man Have Uterus | டெல்லியில் 26 வயது இளைஞர் ஒருவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது, அந்த இளைஞரின் வயிற்றில் கருப்பை இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளைஞரின் வயிற்றில் கருப்பை.. கருவுறாமை பரிசோதனையின்போது தெரியவந்த ஷாக் உண்மை!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Sep 2026 13:52 PM IST

டெல்லி, செப்டம்பர் 11 : டெல்லியை (Delhi) சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததன் காரண்மாக கருவுறாமை பரிசோதனையை (Infertility Test) மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் அந்த இளைஞருக்கு கருப்பை மற்றும் கருப்பை குழாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. மருத்து உலகின் மிகவும் அரிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இளைஞரின் வயிற்றில் கருப்பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கருவுறாமை பரிசோதனை மேற்கொண்ட இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

டெல்லியை சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கருவுறாமை பரிசோதனை மேற்கொள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் அவருக்கு பிஎம்டிஎஸ் (PMDS – Persistent Mullerian Duct Syndrome) இருப்பது தெரிய வந்துள்ளது. இது மிகவும் அரிய மருத்துவ குறைபாடாக உள்ளது. இதுவரை மருத்துவ வரலாற்றில் சுமார் 300 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : இனி சிலிண்டர் புக்கிங்கிற்கு 45 நாட்கள் வேண்டாம்.. சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு இடைவெளி 25 நாட்களாக குறைப்பு!

இந்த குறைபாடு ஆண்களுக்கு, ஆண் குரோமோசோம்கள் இருப்பதை போல இருக்கும். ஆனால், பெண்களுக்கான உறுப்புகளும் உள்ளுக்குள்ளே வளர்ச்சி அடையும். இது பெரும்பாலும் கருவுறாமை பரிசோதனையின் போதுதான் தெரியவரும். அந்த வகையில், இந்த இளைஞருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது மருத்துவர்கள் இதனை கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமன்றி, அந்த இளைஞரின் விதைகள் இறங்காத நிலையில், அதில் ஒன்றில் கேன்சருக்கு முந்தைய பாதிப்பு இருந்ததையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அருவை சிகிச்சை மூலம் அகற்றிய மருத்துவர்கள்

முன்னதாக அந்த இளைஞர் கருவுறாமைக்கான மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது விந்து நீரில் விந்தனுக்கள் இல்லாமல் இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தீவிர ஆய்வுகளுக்கு பிறகு மருத்துவர்கள் இளைஞருக்கு அருவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க : கேரள கொடூர விபத்து.. தமிழக மாணவர்கள் மது போதையில் கார் ஓட்டினார்களா? தடயவியல் மருத்துவர் பகீர் தகவல்!

இந்த நிலையில் தான் லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம் இளைஞரின் வயிற்றில் இருந்த கருப்பை மற்றும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த அவரது விரைகளையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

Follow Us