அன்பு தாய்மார்களே!… பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார் – ரசிகர்கள் சோகம்
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா செப்டம்பர் 11, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 90 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் டிவிக்காக சிவகாசியில் கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று நடைபெற்ற பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது இழப்பு தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா செப்டம்பர் 11, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 90. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் டிவிக்காக சிவகாசியில் கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று நடைபெற்ற பட்டிமன்றத்தில் சாலமன் பாப்பையா கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது இழப்பு தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலமன் பாப்பையா காலமானார்
திருக்குறள் கம்பராமாயணத்துக்கு உரை எழுதியுள்ளார். தமிழ் ரசிகர்களிடையே பட்டிமன்ற பேச்சாளராக மிகவும் பிரபலமானவர். கிட்டத்தட்ட 12,000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தியுள்ளார். அன்புத் தாய்மார்களே என இவர் பட்டிமன்றத்தை தொடங்கும் விதம் தலைமுறைகள் கடந்து ரசிகர்களிடையே தனி வரவேற்பு உண்டு. மேலும் பண்டிகை நாட்களில் இவரது பட்டிமன்றங்கள் தவறாது இடம் பெறும்.
இதையும் படிக்க : மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..




வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 5, 2026 அன்று சிவகாசியில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் கலந்துகொண்டார். இந்த பட்டிமன்றம் சன்டிவியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒளிபரப்பாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
‘பட்டிமன்றங்களில் எளிய மக்களின் பிரச்னைகளை பேச வைத்தவர்’
இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். குறிப்பாக பட்டிமன்றங்களில் புராணங்கள், இலக்கியங்கள் மட்டுமே பேசப்பட்டு வந்த நிலையில், எளிய மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளை எடுத்து வந்து பேச வைத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இதையும் படிக்க : “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
சிவாஜி, பாய்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இவர் நடித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தன்குடி அருகே கடந்த பிப்ரவரி 22, 1936 அன்று பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்றவர் ்தே கல்லூரியில் பின்னாளில் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். நடிகர் விவேக், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் இவரிடம் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . கடந்த 2000 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருக்கிறது.
இது தொடர்பாக பிரபல பாடலாசிரியர் வைரமுத்து தனது இரங்கல் பதிவில், சாலமன் பாப்பையாவின் மறைவு உள்ளத்தை உடைக்கிறது. பாரதி மறைந்தநாளில் பாப்பையாவும் மறைந்திருக்கிறார். செப்டம்பர் 11 தமிழுக்கு நல்லநாள் இல்லை போலும். பட்டிமன்றத் தமிழ் முடிந்துவிட்டதா? பாமரத் தமிழ் மூச்சை நிறுத்திக்கொண்டதா?
கல்லூரிகளில் பயிற்றுவித்த தமிழைக் கடைவீதிக்குக் கொண்டுசேர்த்தவர் சாலமன் பாப்பையா. இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் நூலில் அவர்குறித்தும் எழுதியிருக்கிறேன். சிரிக்க வைத்துச்
சிந்திக்கவும் வைத்த மேடைக் கலைவாணர் மறைந்துவிட்டார். அவரது நாற்காலி காலியாகவே இருக்கும். நிரப்ப முடியாது. மதுரைக்கே ஒரு வெறுமை வந்துவிட்டது. மனம் கலங்குகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும் உலகத் தமிழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.