AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..

விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போல, சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.3,000, சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,500, கன்னியாகுமரிக்கு ரூ.3,800, நாகர்கோவிலுக்கு ரூ.3,690, ஈரோட்டிற்கு ரூ.2,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மதுரைக்கு ரூ.4000, நெல்லைக்கு ரூ. 3,500.. பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்.. கடும் அதிருப்தியில் பொதுமக்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Sep 2026 10:31 AM IST

செப்டம்பர் 11, 2026: வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை பண்டிகை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு தரப்பில் இயக்கப்படும். அதே சமயத்தில், தெற்கு ரயில்வே தரப்பிலும் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்படும். இந்த சூழலில், ரயில்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்படும் காரணத்தினால், பலரும் பேருந்துகளை நாடுகின்றனர்.

இந்த சூழலில், வரக்கூடிய செப்டம்பர் 14ஆம் தேதி பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என மூன்று நாட்கள் விடுமுறை என்ற சூழலில், பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்துள்ளனர்.

பன்மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம்:


விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் என்பது பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, சென்னையில் இருந்து மதுரைக்கு சுமார் ரூ.4,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதைப்போல, சென்னையில் இருந்து கோவைக்கு ரூ.3,000, சென்னையில் இருந்து நெல்லைக்கு ரூ.3,500, கன்னியாகுமரிக்கு ரூ.3,800, நாகர்கோவிலுக்கு ரூ.3,690, ஈரோட்டிற்கு ரூ.2,500 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வழக்கமாக ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யக்கூடிய இந்த டிக்கெட்டுகள், தற்போது நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளன. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?

அதேபோல, பெங்களூரில் இருந்து கோவைக்கு ரூ.650 ஆக இருக்கும் பேருந்து டிக்கெட் தற்போது ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.750 முதல் ரூ.1,000 வரை விற்கப்பட்ட டிக்கெட்டுகள் தற்போது ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடவடிக்கை எடுக்குமா அரசு?

பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. கடந்த ஆட்சியில் நடந்த அதே தவறையும், ஒரே கேட்பையும் தான் தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசும் மேற்கொண்டு இருக்கிறது என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!

அதே சமயத்தில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழக வெற்றிக் கழக அரசு அமைந்த பிறகு ஆம்னி பேருந்துகளுக்கான பெர்மிட் வழங்க ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்கப்படுவதில்லை. எனவே, இனிமேல் நாங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே மக்களிடம் வசூலிப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இது வெறும் காகித அறிக்கையாக மட்டுமே இருக்கிறது தவிர, நடைமுறையில் கொண்டு வரப்படவில்லை. எனவே, ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்ந்திருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us