AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!

Vanathi Srinivasan Slams TN Govt: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன், மிகுந்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ தற்போது எங்கே சென்றது எனத் தமிழக அரசை நோக்கிக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
வானதி சீனிவாசன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 11 Sep 2026 10:19 AM IST

செப்டம்பர், 11: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து வந்தாலும், களத்தில் குற்றச் சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இந்தச் சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து பதிவாகியுள்ள பாலியல் தொல்லை வழக்குகளைச் சுட்டிக்காட்டி, பாஜக மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பெருமையுடன் தொடங்கப்பட்ட சிறப்புப் படைகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அவர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

மேலும் படிக்க: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?

24 மணி நேரத்தில் அடுக்கடுக்கான குற்றங்கள்:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரே நாளில் வெளியாகியுள்ள குற்றச் சம்பவங்களின் பட்டியலை வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். சென்னையில் பணியாற்றும் ஜிஎஸ்டி பெண் ஆய்வாளருக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை, அரும்பாக்கம் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லை, கள்ளக்குறிச்சியில் அரசுப் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை ஆகியவை இதில் அடங்கும். மேலும், கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் ஓடும் அரசுப் பேருந்தில் நடத்துநரால் மாணவிக்கு ஏற்பட்ட அத்துமீறல், திண்டுக்கல்லில் தனியார் பேருந்து ஓட்டுநரால் பத்தாம் வகுப்பு மாணவிக்கு அளிக்கப்பட்ட தொல்லை, சிவகங்கையில் 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை மற்றும் ராமநாதபுரம் கீழக்கரையில் கஞ்சா போதை ஆசாமிகளால் பெண் தற்கொலை செய்து கொண்ட சோகம் என மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாகப் பாலியல் குற்றங்கள் பதிவாகியுள்ளதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சிங்கப்பெண் படையின் நிலை என்ன?

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு, மிகுந்த விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட ‘சிங்கப்பெண் படை’ அல்லது சிறப்புப் பாதுகாப்புப் படையின் தற்போதைய நிலை என்னவாக இருக்கிறது என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய காவல் அமைப்புகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றன என்றும், அவை பெயரளவில் மட்டுமே இயங்குகின்றனவா என்றும் அவர் வினவியுள்ளார். தொடர்ச்சியாக குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்தச் சிறப்புப் படையின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியிருப்பதாக அவர் சாடியுள்ளார்.

மேலும் படிக்க: “கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!

மக்களின் அச்சமும், அரசின் மீதான விமர்சனமும்:

தற்போதுள்ள சூழலில், “நான் இந்தப் பதிவை இட்டுக் கொண்டிருக்கும் இந்த நொடியில் கூட, தமிழ்நாட்டின் ஏதேனும் ஒரு மூளையில் ஏதேனும் ஒரு பெண்ணுக்கு எதிராகப் பாலியல் குற்றம் நடந்து கொண்டிருக்குமோ” என்ற அச்சம் எழுகிறது என வானதி சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியின் கீழ் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதை மாநில மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் இத்தனை மாவட்டங்களில் அடுக்கடுக்காகப் பாலியல் குற்றங்கள் பதிவாகியிருப்பது காவல் துறையின் கண்காணிப்புக் குறைபாட்டையே காட்டுகிறது என்றும், குற்றவாளிகள் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Follow Us