AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : தங்கம் விலை ரூ.1,920 சரிந்த நிலையில், வெள்ளி ரூ.10,000 சரிந்தது.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price On 11th September 2026 | தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை ரூ.1,920 குறைந்த நிலையில், வெள்ளி ரூ.10,000 குறைந்துள்ளது.

Gold Price : தங்கம் விலை ரூ.1,920 சரிந்த நிலையில், வெள்ளி ரூ.10,000 சரிந்தது.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Sep 2026 10:36 AM IST

சென்னை, செப்டம்பர் 11 : தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று (செப்டம்பர் 10, 2026) தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்று (செப்டம்பர் 11, 2026) தங்கம் மற்றும் வெள்ளி விலை (Silver Price) சரிந்துள்ளது. அதாவது, தங்கம் ரூ.1,920 குறைந்துள்ள நிலையில், வெள்ளி ரூ.10,000 சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடும் ஏற்ற, இறக்கங்களில் தங்கம் விலை – காரணம் என்ன?

பங்குச்சந்தை, புவிசார் பதற்றம், தங்கத்திற்கான தேவை ஆகியவை தங்கத்தின் விலையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளன. இதன் காரணமாக சூழலுக்கு ஏற்ப தங்கம் விலை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் சூழல் உருவானதன் காரணமாக அப்போது தங்கம் சரசரவென விலை உயர்வை சந்தித்தது.

இதையும் படிங்க : உரிய நேரத்தில் க்ளெய்ம் வழங்காததால் 6% வட்டி.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதன் பிறகு சரிந்த தங்கம், தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் அதிரடி விலை உயர்வை சந்தித்துள்ளதன் காரணமாக தங்கம் விலை இன்று சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 11, 2026) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015-க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,289-க்கும், ஒரு சவரன் ரூ.1,22,312-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : பண்டிகை நாட்களில் ரயில் டிக்கெட்டை உறுதிபடுத்துவது எப்படி? அப்போ இந்த ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245-க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, தங்கம் விலை தொடர் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், இந்த ஆண்டின் இறுதியில் தங்கம் விலை உச்சத்தை எட்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us