AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Ravi Mohan: ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணையும் ரவி மோகன்!

Ravi Mohan New Film: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். இவரின் நடிப்பில் தமிழ் மொழியில் தொடர்ந்து புது படங்கள் உருவாகிறது. மேலும் தற்போது இவர் அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ravi Mohan: ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணையும் ரவி மோகன்!
ரவி மோகனின் புதிய திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Sep 2026 10:42 AM IST

தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன் (Ravi Mohan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கத்தில், உருவான இப்படத்தில் நெகட்டிவ் வேடத்தில் ரவி மோகன் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் ரவி மோகன் புதிய படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் கராத்தே பாபு, ஜீனி மற்றும் ப்ரோ கிளப் போன்ற திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இந்த படங்களில்ன் ஷூட்டிங்கை ரவி மோகன் முடித்த நிலையில், புதிய படங்களை ஒப்பந்தமாகிவருகிறார்.

நேற்று (10/09/2026) ரவி மோகன் தனது 46வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகிவருகிறது. இவர் அறிமுக இயக்குநர் GND ஷ்யாம் குமார் (GND Shyam Kumar) இயக்கத்தில் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் பட இயக்குநர் ஜித்து மாதவனின் முந்தைய படங்களை பார்த்து இருக்கீங்களா?

நடிகர் ரவி மோகனின் புதிய திரைப்படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறித்த பதிவு:

நடிகர் ரவி மோகன் தற்போது அறிமுக இயக்குநர் GND ஷ்யாம் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிக்கிறாராம். நேற்று (10/09/2026) ரவி மோகனின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், அதை முன்னிட்டு இந்த படத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த படமானது வரும் 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: சூரி அண்ணனின் கடின உழைப்பு.. மண்டாடி படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

ரவி மோகனின் கைவசம் உள்ள திரைப்படங்கள்:

நடிகர் ரவி மோகன் தனது கைவசத்தில் கிட்டத்தட்ட 6 படங்களுக்கும் மேல் வைத்துள்ளார். இவரின் நடிப்பில் ப்ரோ கிளப், கராத்தே பாபு, ஜீனி, பென்ஸ், வட்டி காசல வாட மற்றும் புதிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் இவரின் நடிப்பில் இந்த 2026ம் ஆண்டில் கராத்தே பாபு மற்றும் ஜீனி போன்ற படங்கள் வெளியாக தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us