Aadhaar Card : இன்னும் 20 நாட்கள் தான் உள்ளது.. அதற்குள் உங்கள் பிள்ளைகளின் ஆதாரில் இதை செய்யுங்கள்.. பெற்றோர்களே கவனியுங்கள்!
Biometric Details Update In Aadhaar Card For Children | 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்கள் இல்லாமல் ஆதார் வழங்கப்படும். இந்த நிலையில், 5 வயதை தாண்டிய குழாந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 கடைசி தேதியாக உள்ளது.
இந்தியாவில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு (Aadhaar Card) கட்டாயமாக உள்ளது. ஆனால், ஒரு வித்தியாசம் ஒன்றும் உள்ளது. அதாவது, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தகைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டு (Blue Aadhaar Card) வழங்கப்படும். இதுவே, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாதாரண ஆதார் கார்டு வழங்கப்படும். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கண் விழி படல், கை ரேகை ஆகியவை முழுமையாக வளர்ச்சி பெற்றிருக்காது. எனவே தான், அவர்களுக்கு கருவிழி படலம், கை ரேகை இல்லாத ஆதார் கார்டு வழங்கப்படும்.
இவ்வாறு முக்கிய பயோமெட்ரிக் தகவல்கள் (Biometric Details) இல்லாமல் குழந்தைகளுக்கு ப்ளூ ஆதார் கார்டு வழங்கப்படும் நிலையில், அவர்கள் 18 வயதை நிறைவடையும்போது பெற்றோர் அவர்களுக்கான கண்விழி படலம், கை ரேகை ஆகியவற்றை அப்டேட் செய்ய வேண்டும். இதனை தற்போது வரை இலவசமாக செய்துக்கொள்ளலாம். ஆனால், இதன் காலக்கெடு நிறைவடைந்த பிறகு இந்த சேவையை இலவசமாக பெற முடியாது. இந்த நிலையில், பயோமெட்ரிக் விவரங்களை எப்போது வரை இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
இதையும் படிங்க : இன்றே கடைசி.. நாளை முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை.. ஏடிஎம்-லும் பணம் கிடைக்காதா?




செப்டம்பர் 30 தான் கடைசி தேதி
5 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) கூறியுள்ளது. இதற்காக செப்டம்பர் 30, 2026 வரை இலவச சேவை வழங்குவதாக கூறியுள்ளது. இந்த தேதியை தவறவிடும் பெற்றோர், தங்களது குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய கட்டணம் செலுத்த வேண்டும்.
இதையும் படிங்க : உரிய நேரத்தில் க்ளெய்ம் வழங்காததால் 6% வட்டி.. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்வது எப்படி?
- அதற்கு பெற்றோர் தங்களது குழந்தைகள் உடன் இ சேவை மையத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு குழந்தைகளுக்கான கண்விழி படலம், கை ரேகை ஆகியவற்றை வழங்க வேண்டும்.
- அதன்பிறகு ஏதேனு சான்றுகள் கோரப்பட்டால் அவற்றையும் வழங்க வேண்டும்.
- பயோமெட்ரிக் விவரங்களை வழங்கிய 15 நாட்களில், அப்டேட் செய்யப்பட்ட புதிய ஆதார் கார்டு வந்துவிடும்.
செப்டம்பர் 30, 2026 வரை தான் இந்த சேவையை இலவசமாக பெற முடியும். அதன்பிறகு கட்டணம் செலுத்தி தான் இந்த சேவையை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.