AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முடிஞ்சா என்ன வெளிய அனுப்புங்க.. போட்டியாளர்களிடையே சேலஞ் செய்த முனியம்மாள் – சூடுபிடிக்கும் பிக் பாஸ்!

Boss Season 10 5th day: இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். தமிழில் இந்நிகழ்ச்சியானது தொடங்கி 5வது நாளான நிலையில், இன்று (11/09/2026) வெளியான முதல் புரோமோவில் முனியம்மாள் போட்டியாளர்களிடையே சவால் விடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

முடிஞ்சா என்ன வெளிய அனுப்புங்க.. போட்டியாளர்களிடையே சேலஞ் செய்த முனியம்மாள் – சூடுபிடிக்கும் பிக் பாஸ்!
பிக் பாஸ் சீசன் 10 ஐந்தாம் நாள்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Sep 2026 11:51 AM IST

விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது தொடங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் வெகு சிறப்பாக தொடங்கிய நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், கிட்டத்தட்ட 19 போட்டியாளர்கள் உள்ளே நுயலைந்தனர். இதில் பிளாக் பாண்டி (Black Pandi) உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது வைல்ட்கார்ட் என்ரியாக காமன் மேன் (The Comman Man) நிகழ்ச்சி போட்டியாளர் மணிவண்ணன் நுழைந்துள்ளார். தற்போதும் இந்த வீட்டில் மொத்தம் 19 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், சாத்விகா தலைவராகவும், வினோத் பாபு எதிர் அணி தலைவராகவும் இருக்கிறார்.

அந்த விதத்தில், இன்று (11/09/2026) வெளியான புரோமோவில் வினோத் பாபு, முனியம்மாள், தான்யா மற்றும் சவன்யா வேலுவை இந்த வாரத்தின் வெளியேற்றத்திற்காக அவர் நாமினேட் செய்திருந்தார். அதற்கு முனியம்மாள் விட்ட சவால் தற்போது இணையத்தில் பரவிவருகிறது.

இதையும் படிங்க: ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் புது படத்தில் இணையும் ரவி மோகன்!

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சவால் விடுத்த முனியம்மாள்:

வினோத் பாபு இந்த வாரத்திற்கான நாமினேஷனுக்காக முனியம்மாள், தான்யா மற்றும் சான்வி வேலு போன்ற போட்டியாளர்களை நாமினேட் செய்திருந்தார். இந்த வாரத்தில் இவர்கள் மூவரின் யாரவது வெளியேறினால் நன்றாக இருக்கும் என அதில் அவர் தெரிவித்திருந்தார். அந்த விதத்தில் உடனடியாக ரியாக்ஷன்ஸ் கொடுத்த முனியம்மாள், “என்னை வாக்களித்து வெளியேற்றினால், நீங்கள் எல்லாரும் என்னை பார்த்து பயந்துவிட்டீர்கள் அதனால் வெளியே அனுப்பிவிட்டிர்கள் என கெத்தாக நெஞ்சை நிமித்திக்கொண்டு போவேன். உண்மையில் என்னை பார்த்து பயப்படவில்லை என்றால், என்னுடன் போட்டி போடுங்கள் இந்த வீட்டில் வைத்து” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு சவால் விடுத்த முனியம்மாள் குறித்த புரோமோ;

தி காமன் மேன் நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளராக முனியம்மாள் உள்ளே நுழைந்த நிலையில், காமன் மேன் நிகழ்ச்சியை ஒப்பிடும்போது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகளே வித்தியாசமாக உள்ளது. பிக் பாஸ் போட்டியாளர்களிடையே முனியம்மாள் நடந்துகொள்ளும் விதம் பார்ப்பவர்களை எரிச்சல் செய்யும் விதத்தில் இருபோனதாக பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பெருமாளாக ரவி மோகன்.. பிறந்தநாளில் வெளியான தெலுங்கு படத்தின் அறிவிப்பு!

மேலும் தற்போது இவரை இந்த வாரத்தின் ஏவிக்ஷனுக்கான நேரடியாக நாமினேட் செய்துள்ள நிலையில், இந்த வீட்டிலிருந்து என்னை வெளியேற்றிவிட்டால், எண்ணி பார்த்து பயந்துவிடீர்கள் என போட்டியாளர்களிடையே சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us