ஆட்சியை கவிழ்த்து முதல்வராக ஆதவ் அர்ஜுனா ப்ளான்.. அந்த பயத்தில் தான் லண்டன் அழைத்து சென்றீர்களா? முதல்வர் விஜய்க்கு அப்பாவு கேள்வி..
ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி. ராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா, CM sir? என அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்
செப்டம்பர் 11, 2026: தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சியின் முதல்வர் சி. ஜோசப் விஜய், முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ள நிலையில், இந்தப் பயணம் குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில், தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து,
இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக, உங்களால் “கல்லாப்பெட்டிக் கூட்டணி” என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து, “மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி” என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கைப் பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள், CM sir? என அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: “கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!!
முதலமைச்சர் விஜய் நோக்கி அப்பாவு எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகள்:
#தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் “#கல்லாப்பெட்டிகூட்டணி ” என்று…
— M Appavu – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) September 10, 2026
நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு, கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசத் துணிவில்லாமல், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் “நரித்தனத்தின் வெளிப்பாடு” என்பது நாட்டுமக்களுக்கு நன்றாகத் தெரியும், CM sir? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா?
மேலும், இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்ததால், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா? என்றும் அப்பாவு விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்?.. ஏரிகளில் 44% மட்டுமே நீர் இருப்பு.. சவாலை சமாளிக்குமா அரசு?
ஆட்சியஒ கவிழ்க்க ஆதவ் அர்ஜுனா பிளான்:
அதேபோல், ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி. ராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஆட்சியைக் கவிழ்த்து முதல்வரானது போல், ஆதவ் அர்ஜுனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு லண்டன் அழைத்துச் செல்கிறீர்களா, CM sir? எனவும் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.