AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Sep 2026 06:25 AM IST

செப்டம்பர் 11, 2026: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அந்த வகையில், அதிகபட்சமாக திருச்சியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டையில் 39.3 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38.7 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருக்கிறது.’

சதம் அடிக்கும் வெயில்:

சென்னையைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 34.2 டிகிரி செல்சியஸும், மீனம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி இருக்கிறது. இந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக பதிவாகக்கூடும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க, வரக்கூடிய அடுத்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

செப்டம்பர் 11-ம் தேதியான இன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அஜித்குமாரின் கார் பந்தயத்தை துவங்கி வைக்கும் முதல்வர் விஜய் – அதிகாரப்பூர்வ தகவல்

செப்டம்பர் 12-ம் தேதியைப் பொறுத்தவரையில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்.15 இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், செப்டம்பர் 15-ம் தேதி விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வேலூரில் கொடூரம்… தேவாலய கட்டுமான பணியில் விபத்து.. 3 தொழிலாளர்கள் பரிதாப பலி!

செப்டம்பர் 16-ம் தேதியைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us