பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த இளம்.. ஷாக் வீடியோ.. ஜம்மு & காஷ்மீரில் அதிர்ச்சி சம்பவம்!
21 Years Old Young Woman Jumped Into River | சமூக ஊடகங்களில் நாள்தோறும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் 21 வயது இளம் பெண் ஒருவர் ஆற்றில் குதித்தது தொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஸ்ரீநகர், செப்டம்பர் 06 : ஜம்மு காஷ்மீரில் (Jammu and Kashmir) 21 வயது இளம் பெண் பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்த இளம் பெண்
ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 21 வயது இளம் பெண், நேற்று (செப்டம்பர் 05, 2026) உள்ளூரில் நடந்த திருவிழாவுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், குடும்பத்தினரை தொடர்புக்கொண்ட அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவரை சந்திக்க செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர் இல்லாததன் காரணமாக அவர் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.




இதையும் படிங்க : ‘பாரத் என்சிஏபி 2.0’ புதிய கார் பாதுகாப்பு மதிப்பீடு.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு!!
இந்த நிலையில் தான், பாயல் அங்குள்ள செனாப் ஆற்றின் பாலத்தின் விளிம்பிற்கு சென்றுள்ளார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை தடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாக பாயல் ஆற்றில் குதித்து மாயமாகியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
🇮🇳 JUST IN:
A 21-year-old woman identified as Payal Devi reportedly jumped from the Shiva Dal Bridge near Prem Nagar in Doda, Jammu and Kashmir, into the fast-flowing Chenab River on Saturday, September 5.
A video showing the woman shortly before the incident has surfaced… https://t.co/edrVOjyzwk pic.twitter.com/jmg49NRkTw
— BSN (@Barristerstreet) September 6, 2026
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், பாயல் பிளையிங் கிஸ் கொடுத்தபடி, அங்கிருப்பவர்களை பார்த்துன் கை அசைக்கிறார். பிறகு பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதிக்கிறார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஓடிச் சென்று பார்க்கின்றனர். ஆனால், பாயல் மாயகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.