அம்மான்னா சும்மாவா.. மகளின் கல்விக்காக வெறுங்காலில் மாரத்தான் ஓடி வென்ற தாய்.. மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி!
Maharashtra Woman Won Marathon : மகாராஷ்டிர மாநிலத்தில் மகளின் கல்வி செலவுக்காக பெண் ஒருவர் வெறுங்கா லில் மாரத்தான் ஓடி வெற்றி பெற்று ரூ. 3 ஆயிரம் பரிசை வென்றார். இது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
மகராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தை சேர்ந்த 47 வயதான பெண் ஒருவர் வெறும் காலுடன் மாரத்தான் போட்டியில் ஓடி முதலிடம் பிடித்தார். இதில், பெற்ற பரிசு தொகையை அவரது மகள்களின் கல்வி நிதி உதவிக்கு அளித்தார். அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர், அந்த ஊரில் உள்ள ஒரு அகாதமியின் சமையலராக பணிபுரிந்து வருகிறார். மும்பையில் நடந்த ஒரு விபத்தில் அவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது 2 மகள்களையும் வளர்க்கும் பொறுப்பு அவரிடம் வந்து சேர்ந்தது. பொருளாதார சிரமங்கள் இருந்த போதிலும், தனது இரு மகள்களுக்கும் நல்ல கல்வி கிடைப்பதை அவர் முதல் இலக்காக கொண்டிருந்தார். மேலும், அவர்களை ஆதரிப்பதற்காக ரமாபாய் தனது மூத்த மகளை அம்போஜாகாயில் உள்ள ஒரு அகாடமியில் சேர்த்திருந்தார்.
ரூ. 3 ஆயிரம் பரிசுடன் மாரத்தான் போட்டி
அங்கே, அவர் சமையலராகவும் வேலை பார்த்து வருகிறார். அவரது மகள் படிப்பை தொடரும்போது, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் போது, உணவு தயாரிப்பதை அவரது அன்றாட வழக்கமாக இருந்து வருகிறது. இதனிடையே, உள்ளூர் அமைப்பின் மூலமாக ரூ. 3 ஆயிரம் முதல் பரிசுடன் அம்ரித் தாவூத் மாரத்தான் நடத்தப்பட்டது. இதில், ரமாபாய் பங்கேற்று ஓட முடிவு செய்திருந்தார். அதன்படி, சாதாரண சேலை அணிந்தவாறு, ட்ராக் சூட் அணிந்திருந்த இளம் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு மத்தியில் அவர் ஓடினார்.
மேலும் படிக்க: மண்ணுக்குள் கேட்ட அழுகுரல்.. நேபாள் வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது சிறுமி!




செருப்பை கையில் தூக்கியவாறு வெறுங்காலில் ஓடிய பெண்
ஆரம்பத்தில் ஓட்டப்பந்தயத்துக்காக செருப்புகளை அவர் அணிந்திருந்த நிலையில், பந்தயம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே அவை வலுக்கத் தொடங்கி விட்டது. இதனால், ரமாபாய் அதனை கழற்றி கையில் பிடித்துக் கொண்டு வெறும் காலுடன் தொடர்ந்து ஓடினார். மற்ற போட்டியாளர்களை முந்தி செல்லும்போது, அவர் தனது சேலையை சமாளித்தபடியே கரடுமுரடு சாலையிலும் கற்களிலும் ஓடினார். இறுதியில், ரமாபாய் இலக்கு கோட்டை முதலில் கடந்து வெற்றியை வசமாக்கினார்.
ரூ. 3 ஆயிரத்தை மகளின் படிப்புக்காக செலவிடுவேன்
தனது வெற்றி குறித்து பேசி அம்மா பாய் இந்த பந்தயத்தில் பல பெண்கள் பங்கேற்ற போதிலும், பரிசை வெல்வதில் நான் உறுதியாக இருந்தேன். ஓடும்போது தனது மகிகளின் எதிர்காலத்தை காண முடிந்ததாகவும், பரிசுத்தொகை ரூ. 3 ஆயிரத்தை அவர்களின் புத்தகங்கள் வாங்க பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அவரது மகள் பூஜாவும் இந்த மாரத்தான் பங்கேற்று 2- வது இடம் பிடித்தார். தனது தாய் முதலிடம் பிடிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று பூஜா தெரிவித்தார்.
மேலும் படிக்க: இலங்கை கதவுகள் திறக்கப்பட்டன.. இந்தியாவில் இருந்து தடையின்றி தாயகம் செல்லலாம்.. Sri Lanka அரசின் மாஸ் பிளான்!