AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இது வெறும் நிவாரணம் இல்ல… நேபாள மக்களுக்கு இந்தியா அனுப்பிய பெட்டிகளில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியான வாசகம்!

Nepal Floods : நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் நிவாரண பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதில், நிவாரண பெட்டிகள் மீது ஒரு வாசகம் எழுத்தப்பட்டு உள்ளது. அது என்னவென்று பார்க்கலாம்.

இது வெறும் நிவாரணம் இல்ல… நேபாள மக்களுக்கு இந்தியா அனுப்பிய பெட்டிகளில் எழுதப்பட்டிருந்த நெகிழ்ச்சியான வாசகம்!
நேபாளத்துக்கான நிவாரண பொருள்கள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 27 Aug 2026 18:18 PM IST

நேபாள நாட்டில் போதை கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு சுற்றுலா சென்ற இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிக்கி மாயமாகி உள்ளனர். பெரும் பாதிப்புக்கு உள்ளான அந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி உள்ளது. இதில், இந்தியா சார்பில் அவசர கால நிவாரண பொருட்கள் விமானப்படை விமானங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில், முதல் கட்டமாக 10 டன், 2- ஆவது கட்டமாக 37.5 டன் என மொத்தம் சுமார் 47.5 டன் நிவாரண பொருட்கள் காசியாபாத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரண பொருட்களில், போர்வைகள், தற்காலிக கூடாரங்கள், மருத்துவ பொருள்கள், சூரிய சக்தி விளக்குகள், உணவு பொட்டலங்கள், தூக்க பைகள், குளோரின் மாத்திரைகள், சுகாதார பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிவாரண் பெட்டியில் எழுத்தப்பட்ட வாசகங்கள்

இந்த பொருட்கள் அனைத்தும் அட்டை பெட்டிகளில் பாதுகாப்பான முறையில் பேக் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த அட்டை பட்டியில் ஒரு வாசகம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அதில், இந்திய மக்களும், இந்திய அரசும், வழங்கும் பரிசு பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வாசகங்கள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: நேபாளத்தை திருப்பி போட்ட பெரு வெள்ளம்.. சிக்கிய தமிழர்களின் முழு விவரம்..!

பனி ஏரி உடைப்பின் காரணமாக வெள்ளம்

நேபாள நாடு- சீனா எல்லையான திபெத் மலையில் உள்ள பனிக்கட்டிகள் சரிந்து விழுந்ததில் பனி ஏரியில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக போதை கோஷி ஆற்றில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், ஆக்ரோஷமாக பாய்ந்து வந்த வெள்ளமானது மேம்பாலங்கள், சாலைகள், வீடுகள், அலுவலகங்கள் வாகனங்கள் ஆகிவற்றை கண் இமைக்கும் நேரத்தில் அடித்துக் கொண்டு சென்றது. இந்த வெள்ளத்தை பார்த்த பொதுமக்கள் நாலாபுரமும் சிதறி ஓடிய நிலையில், அவர்களையும் ஆக்ரோஷம் வெள்ளம் வாரி சுருட்டி சென்றது.

200- க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய நேபாள நாட்டு வெள்ளப்பெருக்கால், தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கி உள்ளனர். இதில், தற்போதைய நிலவரப்படி சுமார் 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காணாமல் போய் உள்ளதாகவும் அங்கிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: நேபாளத்தை புரட்டிப் போட்ட வெள்ளப் பெருக்கு.. 133 இந்தியர்களின் நிலை என்ன ?

Follow Us