AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நேபாளத்தை திருப்பி போட்ட பெரு வெள்ளம்.. சிக்கிய தமிழர்களின் விவரம்..!

Nepal Floods Details Of Tamils S​tranded : நேபாள நாட்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கிய நிலையில், அவர்கள் குறித்த முழு விவரங்களை அரசு தரப்பில் வெளியிட்டுள்ளது. அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம் .

நேபாளத்தை திருப்பி போட்ட பெரு வெள்ளம்.. சிக்கிய தமிழர்களின் விவரம்..!
நேபாள நாட்டு பெரு வெள்ளம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 26 Aug 2026 20:12 PM IST

நேபாள நாட்டில் வடக்கு ராசுவா பகுதியில் இன்று காலை ( புதன்கிழமை) ஆகஸ்ட் 26- ஆம் தேதி கோஷி ஆற்றில் திடீரென பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், அந்த நாட்டுக்கு கைலாய சுற்றுலாவுக்கு சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த சுமார் 49 பேர் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் யார் என்ற விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில்,

மேலும் படிக்க: நேபாள பெரு வெள்ளத்துக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

  • திருச்சி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த தலா 5 பேர்.
  • கடலூர்- 12 பேர்.
  • சூளகிரி- 2 பேர்.
  • கும்பகோணம்- 17 பேர்.
  • ஓசூர்- 2 பேர்.
  • மயிலாடுதுறை- 7 பேர்.
  • புதுச்சேரி- 7 பேர்

வாட்ஸ் ஆப்பில் ஆடியோ வெளியிட்ட தமிழர்கள்

என மொத்தம் 57 பேர் திருக்கயிலாய மானசரோவர் யாத்திரை சென்ற போது வெள்ளத்தில் சிக்கி உள்ளனர். இந்த குழுவானது இன்று திபெத்தில் கைரோங் செல்ல இருந்த நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இருந்த இடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. நேபாளம் சென்றிருந்த 57 பேர் கொண்ட குழுவில் 17 பேர் கொண்ட ஒரு குழு தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக வாட்ஸ் ஆப் ஆடியோ மூலமாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

3 பேருந்துகளில் ஒரு பேருந்தை அடித்து சென்ற வெள்ளம்

இதே போல, மற்றவர்களும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் 3 பேருந்துகளில் சென்றுள்ளனர். இதில், ஒரு பேருந்து வெள்ளத்தில் இருந்து தப்பித்துள்ளது. மற்ற 2 பேருந்துகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பெரு வெள்ளத்தில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களை சேர்ந்த சுமார் 400- க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வெள்ளத்தின் காரணமாக ரசுவா பகுதிக்கு அருகே உள்ள இடத்தில் தாங்கள் தங்கி இருப்பதாகவும், அந்த பகுதியில் இருந்து வெளியே வர முடியாத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது

ஆனால், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், மீட்கப்பட்ட தமிழர்கள் தற்போது நேபாள ஆயுதப்படைக்கு சொந்தமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், அயலக தமிழர்கள் நலத்துறை சார்பில் அவர்களின் நிலை, அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம், முகவரி உள்ளிட்ட தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இருள் சூழ்ந்துள்ள நிலையில் நேபாள நாட்டில் மீட்பு பணிகள் தொய்வடைந்துள்ளது. ஏற்கனவே, மலை பாங்கான பகுதி என்பதால் மீட்பு பணிகள் தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள்.. அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..

Follow Us