தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும், விமான நிலையமும் வேண்டும் – அமைச்சர் ராஜ்மோகன்..
“பரந்தூர் விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறிப்பது, தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பதற்கு சமம். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் அந்த நிலத்தை வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 26, 2026: பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு அந்த நிலங்களை மீண்டும் வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அடுத்த பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்திருந்தன.
ஆனால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்த பரந்தூர் மக்கள்:
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பரந்தூர் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. யார் யார் தெரியுமா? முழு விவரம்..
தமிழ்த்தென்றல் திரு.வி.க. கல்யாணசுந்தரனாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திரு.வி.க.வின் உருவப்படத்திற்கு பள்ளிக்கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
விவசாயமும் வேண்டும் – விமான நிலையமும் வேண்டும்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் படிக்க: சென்னைக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. யார் யார் தெரியுமா? முழு விவரம்..
மேலும் பேசிய அவர், “பரந்தூர் விவசாயிகளிடம் இருந்து நிலத்தைப் பறிப்பது, தாயிடமிருந்து குழந்தையைப் பிரிப்பதற்கு சமம். பரந்தூர் விமான நிலையத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு மீண்டும் அந்த நிலத்தை வழங்குவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு விவசாயமும் வேண்டும்; விமான நிலையமும் வேண்டும். எனவே, இது தொடர்பாக அனைத்து தரப்பு மக்களிடமும் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.