நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு… 49 தமிழர்களின் நிலை என்ன.. பெரும் பரபரப்பு!
Nepal Floods : நேபாள நாட்டில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் அந்த நாட்டுக்கு கைலாஷ் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதில், 22 பேர் மீட்கப்பட்ட நிலையில், 49 பேரின் நிலை கேள்விக் குறியாகி உள்ளது.
நேபாள நாட்டில் இன்று திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், அந்த நாட்டுக்கு சென்னையை சேர்ந்த 49 பேர் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த 57 பேர் என இந்தியாவை சேர்ந்த சுமார் 400 பேர் கைலாஷ் யாத்திரைக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இவர்கள் கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டனர். இவர்களை மீட்க முயற்சியில் நேபாள நாட்டு ராணுவம் உள்ளிட்ட படைகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில், தமிழகத்தை சேர்ந்த 49 பேரின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. நேபாள ராணுவம் சுமார் 7 ஹெலிகாப்டர்களில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 30- க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில், மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் நேபாள ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மீட்புபணி
இதில், கும்பகோணத்தை சேர்ந்த சுமார் 22 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் முயற்சியில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு சிக்கி சுமார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த 8 பேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. திருவண்ணாமலை, புதுச்சேரி, திருவாரூர், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த சேர்ந்தவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுற்றுலா நிறுவனமாக நேபாளத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம்? என்ன நடந்தது.




குரோம்பேட்டை சுற்றுலா நிறுவனம் மூலமாக சுற்றுலா
தற்போது அந்த நிறுவனத்தை நிறுவனத்தின் மூலமாக சுற்றுலா சென்றவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேபாள நாட்டு வெள்ளத்தில் 15 யாத்ரிகள்கள் உட்பட மொத்தம் 291 வெளிநாட்டினாரை காணவில்லை என்று அந்த அரசு தெரிவித்துள்ளது. இதே போல, நேபாள நாட்டினர் 93 பேர் காணாமல் போய் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. திபெத்தில் உருவாகி, நேபாளத்தின் திரிசூலி ஆற்றில் கலந்து, இறுதியில் கண்டக் நதியாக இந்தியாவிற்குள் பாயும் போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, திமுரே பஜார் மற்றும் ரசுவா எல்லைக் கடக்கும் இடத்தில் உள்ள சுங்கப் பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு
இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் நீர் மின்சாரம் மற்றும் சூரிய சக்தி மின் நிலையங்கள் உட்பட சுமார் 430 மெகாவாட் உற்பத்தித் திறன் சேதமடைந்துள்ளதாக நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.இந்த பேரழிவால் ஆணையத்தின் உற்பத்தி, மின் கடத்தல் மற்றும் விநியோக வசதிகள் சேதமடைந்துள்ளன. இதன் விளைவாக மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக அந்த துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஏரியில் மிதந்த 6 மனித உடல்கள்.. 5 பேர் சிறுவர்கள்.. கர்நாடகாவில் மர்ம சம்பவம்!