AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருமண தோஷம் கழிக்கிறேன் என கூறி… பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. கோவை ஜோதிடரின் காம லீலை!

Coimbatore Crime : கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருமண தடை நீக்குவதாக கூறி 30 வயது பெண்ணை வரவழைத்து பாலியல் தொல்லை அளித்ததுடன், அவரிடமிருந்து பணத்தை பறித்து கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர் மீது ஐஜியிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து உள்ளார்.

திருமண தோஷம் கழிக்கிறேன் என கூறி… பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. கோவை ஜோதிடரின் காம லீலை!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Aug 2026 14:30 PM IST

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண். இவருக்கு பெற்றோர்கள் நீண்ட நாட்களாக திருமண வரன் பார்த்து வந்தனர். இதில், அந்த பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்காக அவரது பெற்றோர் பல்வேறு கோவில்களில் பரிகாரம் செய்தல் மற்றும் பல்வேறு ஜோதிடர்களிடம் ஜாதகம் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், அந்த பெண்ணின் நண்பர் மூலம் கோயம்புத்தூர் மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு ஜோதிடரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண் சந்தித்துள்ளார். அப்போது, திருமணம் தள்ளி போவதற்கு சில தடைகள் இருப்பதாகவும், அந்த தடைகளுக்கு பரிகாரம் செய்தால் உடனடியாக திருமணம் நடக்கும் என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார். அதன்படி, பரிகாரம் தொடர்பாக பேசுவதாக கூறி அந்த பெண்ணை அடிக்கடி நேரில் அழைத்து சந்தித்து வந்தார்.

திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை

அப்போது, அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஜோதிடர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை மையமாக வைத்து அந்த பெண்ணணை கட்டாயப்படுத்தி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், கடன் இருப்பதாகவும், அதனை அடைப்பதற்காக அந்த பெண் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை பறித்து மோசடி செய்துள்ளார். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜோதிடர் தனது உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்திருப்பதாக கூறி ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை கேட்டு வாங்கி சென்றுள்ளார்.

மேலும் படிக்க: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஜோதிடர்

இந்த சம்பவம் நிகழ்ந்த சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த பெண்ணுடன் ஜோதிடர் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்த தொடங்கியுள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த அந்த பெண் ஜோதிடர் குறித்து விசாரித்த போது, அவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்றது தெரிய வந்தது. பின்னர், இது தொடர்பாக அந்த ஜோதிடரிடம், அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக ஜோதிடர் மிரட்டியதுடன், காவல்துறையில் உயர் அதிகாரிகள் என்னுடைய வாடிக்கையாளராக உள்ளனர். அவர்களிடம் கூறி தொலைத்து கட்டி விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.

முதல்வர் தனிப்பிரிவு, எஸ்பி.க்களிடம் பெண் புகார்

இந்த சம்பவம் தொடர்பாக அந்த பெண் கோயம்புத்தூர் சரக ஐ.ஜி.யிடம் புகார் அளித்துள்ளார். இதேபோல, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதல் அமைச்சரின் தனிப்பிரிவு அலுவலகத்திற்கும் புகார் மனுக்களை அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: போலீஸ் தாக்கியதில் ஆகாஷ் உயிரிழப்பு – சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் – 6 காவலர்கள் மீது வழக்குப்பதிவு

Follow Us