AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Tamilnadu Ration Shop e-KYC: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி e-KYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் கார்டு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்கள் 100% e-KYC பதிவை நிறைவு செய்யும் நோக்கில், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறுகின்றன. குடும்ப அட்டைதாரர்கள் கைரேகை பதிவு செய்து பயனடையலாம்.

ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் கடை
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 26 Aug 2026 07:10 AM IST

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களைப் பெறும் குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களைத் துல்லியமாகப் பராமரிக்கும் நோக்கில் e-KYC (மின்னணு பயனாளி சரிபார்ப்பு) பணிகளைத் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. ரேஷன் கார்டுகளில் உள்ள பயனாளிகள் உயிரோடு இருக்கிறார்களா, தகுதியான பயனாளிகள் மட்டுமே சலுகைகளைப் பெறுகிறார்களா என்பதை உறுதிசெய்யக் கைரேகை பதிவு மூலமான e-KYC நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் இச்சேவையைப் பூர்த்தி செய்யாத பொதுமக்களின் வசதிக்காகத் தமிழக அரசு ஒரு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி: முதலமைச்சர் விஜயை சந்தித்த விவசாயிகள்

ஆகஸ்ட் 29 அன்று சிறப்பு முகாம்:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகள்) வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி e-KYC சரிபார்ப்புக்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இச்சிறப்பு முகாம்கள் செயல்படும். குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் பயோமெட்ரிக் கைரேகையைப் பதிவு செய்து e-KYC பணிகளை எளிதாக நிறைவு செய்யலாம்.

96.21% பணிகள் நிறைவு – 100% இலக்கு:

கைரேகை சரிபார்ப்பு மூலமான e-KYC பணிகளில் தமிழகம் ஏற்கனவே மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 96.21 சதவீதக் குடும்ப அட்டைகளுக்கான e-KYC சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களையும் விரைவாக உள்ளடக்கி, 100 சதவீத e-KYC பதிவை முழுமையாக எட்ட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தான் இந்த ஆகஸ்ட் 29 சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு நடைமுறைகள்:

பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதோடு, போலியான உறுப்பினர்களின் பெயர்களை நீக்கி தகுதியான ஏழை எளிய குடும்பங்களுக்குச் சலுகைகள் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த e-KYC நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. மேலும், கைரேகை பதிவு செய்ய இயலாத வயதான மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பதிலாகக் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் சரிபார்ப்பு மூலமாகவோ அல்லது ரேஷன் கடை பணியாளர்களின் சிறப்புச் சரிபார்ப்பு மூலமாகவோ விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் e-KYC செய்யாத காரணத்திற்காக யாருடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படாது என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..

பொதுமக்களுக்கு அழைப்பு:

எனவே, இதுவரை ரேஷன் கடைகளில் e-KYC கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி தங்களுக்குரிய ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று, குடும்ப உறுப்பினர்களின் கைரேகையைப் பதிவு செய்து e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் ரேஷன் சேவைகள் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us