பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக வெளிப்படையாக செயல்படவில்லை – பெ. சண்முகம்..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களைப் போன்றவர்கள் பலமுறை வலியுறுத்திய பிறகும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, திமுக ஆட்சிக் காலம் முழுவதும் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆகஸ்ட் 25, 2026: பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் வகையில், பரந்தூர் அருகே விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதற்கு நன்றி: முதலமைச்சர் விஜயை சந்தித்த விவசாயிகள்
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் திமுக வெளிப்படையாக செயல்படவில்லை:
எங்களைப் போன்றவர்கள் பலமுறை வற்புறுத்தியதற்கு பிறகும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு செய்ய திரு. மச்சேந்திர நாதன் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திமுக ஆட்சிக்காலம் முழுவதும் வெளியிடாமல் மூடி மறைத்தது ஏன்?… pic.twitter.com/g9aqHpXDY2
— Shanmugam P (@Shanmugamcpim) August 25, 2026
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எங்களைப் போன்றவர்கள் பலமுறை வலியுறுத்திய பிறகும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை, திமுக ஆட்சிக் காலம் முழுவதும் வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: பரந்தூர் விமான நிலையம் அமைந்திருந்தால் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் – அமைச்சர் கீர்த்தனா..
மேலும், “இந்த விவகாரத்தில் திமுக வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை. அந்த அறிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு ஏன் ஏற்பட்டது? இதுகுறித்த உண்மையை வெளியிட அரசு தயாரா?” என்றும் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.